Published : 12 Sep 2022 06:34 AM
Last Updated : 12 Sep 2022 06:34 AM
சென்னை: கடந்த 5-ம் தேதி டெல்லியில்ஆசிரியர்களிடையே பேசியபிரதமர் மோடி ‘பிஎம் ’ என்றதிட்டத்தை அறிவித்தார். இந்தஅறிவிப்பு குறித்து அண்ணாபல்கலைக்கழக முன்னாள்துணைவேந்தர் இ.பாலகுருசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
ஆசிரியர் தினத்தன்று பிரதமர் நரேந்திர மோடியால் அறிவிக்கப்பட்டுள்ள பிஎம் திட்டம் மகத்தான திட்டமாகும். இது, நாடு முழுவதிலும் உள்ள அரசுப் பள்ளிகளில் மாற்றத்தை ஏற்படுத்தக் கூடிய, நவீன மற்றும் முழுமையான கல்வியை அளிக்கும். 21-ம் நூற்றாண்டு சமூகத்தின் சவால்களை எதிர்கொள்வதற்கு தேவையான விழுமியங்கள் மற்றும்திறன்களை மாணவர்கள் பெறச்செய்வதே இத்திட்டத்தின் முக்கிய நோக்கமாகும்.
இத்திட்டத்தின் கீழ் நாட்டில்7 ஆயிரத்துக்கும் மேற்பட்டவட்டாரங்களில் உள்ள 14,500 அரசுப் பள்ளிகள் மேம்படுத்தப்பட்டு வலுப்படுத்தப்பட உள்ளன. இத்திட்டம் மத்திய அரசால் 5 ஆண்டுகளுக்கு 27 ஆயிரத்துக்கும் மேற்பட்டகோடி ரூபாய் செலவில் மேற்கொள்ளப்படுகிறது. 2020-ம்ஆண்டு தேசிய கல்விக் கொள்கையை நடைமுறைப்படுத்து வதற்கான முன்மாதிரிப் பள்ளிகளாக பிஎம் பள்ளிகள்செயல்படும். மேலும் நீண்ட காலத்துக்கு தாக்குபிடிக்கும் வாழ்க்கை முறை பற்றி இளைஞர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் பசுமைப் பள்ளிகளாக மேம்படுத்தப்படும்.
நாடு விடுதலை பெற்று 75 ஆண்டுகளுக்குப் பிறகும் இந்தியா முன்னேறி வரும் நாடாகவே உள்ளது. அதன் மனிதவள குறியீடு பரிதாப கரமான வகையில் 131 ஆக உள்ளது. நாடு முழுவதிலும் பள்ளிக் கல்வியின் தரம் மிகவும் குறைவாக இருப்பதே இதற்கு காரணம். ஒவ்வொரு அரசுப்பள்ளியிலும் கல்வியின் தரத்தை மேம்படுத்த நாம் முயற்சிக்காவிட்டால் நாம் வளர்ந்த நாடாக முடியாது.
கல்வி, சுகாதாரம், வேளாண்மை, அடிப்படை கட்டமைப்புகள் ஆகியவை பொருளாதார வளர்ச்சிக்கான 4 தூண்களாக கருதப்படுகின்றன. பிஎம் திட்டமும் கடந்த 8 ஆண்டுகளில் இத்துறைகளில் பிரதமர் மோடிஅரசின் ஏராளமான திட்டங்களும் வரும் காலத்தில், நிச்சயமாக 2047-க்கு முன், இந்தியாவை மிகப்பெரிய பொருளாதார வல்லரசாக மாற்றும் என நாம் நம்புவோம். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT