Published : 05 Sep 2022 07:08 AM
Last Updated : 05 Sep 2022 07:08 AM

தமிழ் திறனறி தேர்வு: விண்ணப்பிக்க செப்.9 வரை அவகாசம்

சென்னை

தமிழக மாணவர்கள் தமிழ் மொழி இலக்கியத் திறனை மேம்படுத்திக்கொள்ளும் வகையில் இந்த ஆண்டு முதல் தமிழ் இலக்கிய திறனறி தேர்வு நடத்தப்படுகிறது. இத்தேர்வில்பிளஸ் 1 மாணவர்கள் பங்கேற்கலாம்.

மாநில அளவில் நடைபெறும் இத்தேர்வில், 1,500 பேர் தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்கு மாதம்தோறும் ரூ.1,500 வீதம், 2 ஆண்டுகளுக்கு கல்வி உதவித்தொகை வழங்கப்படும்.

தேர்வுக்கான விண்ணப்பங்கள் பள்ளி தலைமை ஆசிரியர்கள் வழியாக ஆகஸ்டு 22-ம் தேதி முதல் பெறப்பட்டு வருகின்றன. மாணவர்களின் விண்ணப்பத்தை செப்டம்பர் 9-ம் தேதிக்குள் அனுப்ப வேண்டும் என்று தலைமை ஆசிரியர்களுக்கு அரசு தேர்வுத்துறை அறிவுறுத்தியுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x