ஆசிரியர் தேர்வு: செப்.2 முதல் 4 வரை சான்றிதழ் சரிபார்ப்பு

ஆசிரியர் தேர்வு: செப்.2 முதல் 4 வரை சான்றிதழ் சரிபார்ப்பு
Updated on
1 min read

சென்னை: அரசு மேல்நிலைப் பள்ளி முதுகலை பட்டதாரி ஆசிரியர் மற்றும் உடற்கல்வி இயக்குநர், கணினி பயிற்றுநர் (கிரேடு-1) நேரடி நியமன தேர்வுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு பட்டியலை ஆசிரியர் தேர்வு வாரியம் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்டது. இந்நிலையில், சான்றிதழ் சரிபார்ப்பு கால அட்டவணையை பாடப்பிரிவுகள் வாரியாக நேற்று வெளியிட்டது.

அதன்படி, சான்றிதழ் சரிபார்ப்பு செப்டம்பர் 2-ம் தேதி முதல் 4-ம் தேதி வரை சென்னை டிபிஐ வளாகத்தில் உள்ள ஆசிரியர் தேர்வு வாரிய அலுவலகத்தில் நடைபெறுகிறது. சான்றிதழ் சரிபார்ப்புக்கான அழைப்புக்கடிதம் 2 நாட்களுக்கு முன் ஆசிரியர் தேர்வு வாரியத்தின் இணையதளத்தில் வெளியிடப்படும்.

அந்த அழைப்புக்கடிதம் மற்றும் இதர படிவங்களை தேர்வர்கள் பதிவிறக்கம் செய்துகொள்ள வேண்டும் என்று டிஆர்பி தலைவர் ஜி.லதா தெரிவித்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in