

சின்சினாட்டி மாஸ்டர்ஸ் டென்னிஸ் தொடரில் மகளிர் பிரிவில் பிரான்ஸ் வீராங்கனை கரோலின் கார்சியா சாம்பியன் பட்டம் வென்றார்.
அமெரிக்காவின் ஓஹியோவில் சின்சினாட்டி நகரில் நடைபெற்று வந்த இந்தத் தொடரில் மகளிர் ஒற்றையர் பிரிவு இறுதிப் போட்டியில் தகுதி நிலை வீராங்கனையான பிரான்ஸின் கரோலின் கார்சியா, 21-ம் நிலை வீராங்கனையான பெட்ரா விட்டோவாவை எதிர்த்து விளையாடினார். இதில் கரோலின் கார்சியா 6-2, 6-4 என்ற நேர் செட்டில் வெற்றி பெற்று சாம்பியன் பட்டம் வென்றார். 35-ம் நிலை வீராங்கனையான கார்சியா மாஸ்டர்ஸ் தொடரில் பட்டம் வெல்வது இது 3-வது முறையாகும்.