சண்டிகர் விமான நிலையத்துக்கு பகத்சிங் பெயர் சூட்ட முடிவு

சண்டிகர் விமான நிலையத்துக்கு பகத்சிங் பெயர் சூட்ட முடிவு
Updated on
1 min read

சண்டிகர்: சண்டிகர் சர்வதேச விமான நிலையத்திற்கு சுதந்திரப் போராட்ட வீரர் பகத்சிங் பெயரை சூட்ட முடிவு செய்யப்பட்டுள்ளது.

பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான், சண்டிகர் விமான நிலையத்துக்கு சுதந்திரப் போராட்ட வீரர் பகத்சிங் பெயர் சூட்டப்படும் என்று ஏற்கெனவே அறிவித்தார். அதன்படி, சண்டிகர் விமான நிலையத்துக்கு பகத்சிங் பெயர் சூட்ட முடிவு செய்யப்பட்டுள்ளது.

சண்டிகர் விமான நிலையத்தின் கட்டுமானம் மற்றும் நவீனமயமாக்கலில் பஞ்சாப் மற்றும் ஹரியாணாவுக்கு சம பங்கு உள்ளது. இந்நிலையில், பஞ்சாப் முதல்வர் பகவந்த் மானை ஹரியாணா துணைமுதல்வர் துஷ்யந்த் சவுதாலா சந்தித்துப் பேசினார்.

இந்தச் சந்திப்பின்போது சண்டிகர் விமான நிலையத்துக்கு பகத்சிங் பெயர் சூட்ட வேண்டும் என்று பகவந்த் மான் கோரினார். இதை துஷ்யந்த் சவுதாலா ஏற்றுக் கொண்டார். அதேநேரம், சண்டிகர் விமான நிலையத்தின் பெயருடன் பஞ்ச்குலா என்ற பெயரையும் இணைக்க வேண்டும் என்று அவர் கோரினார்.

சண்டிகர் சர்வதேச விமான நிலையத்திற்கு பகத் சிங் பெயரை சூட்ட பஞ்சாப் மற்றும் ஹரியாணா அரசு ஒப்புக்கொண்டுள்ளதாக ட்விட்டரில் பகவத் மான் தெரிவித்துள்ளார்.

சண்டிகர் விமான நிலைய கட்டுமானத்தில் ஹரியாணா சமபங்கைக் கொண்டிருப்பதால், அதன் பெயருடன் பஞ்ச்குலாவின் பெயரையும் சேர்க்க வேண்டும்என்றும் இதற்கான பரிந்துரையைபஞ்சாப் அரசுக்கு அனுப்பியுள்ள தாகவும் இதே கோரிக்கை மத்திய அரசுக்கும் அனுப்பப்படும் என்றும் துஷ்யந்த் சவுதாலா கூறியுள்ளார்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in