Published : 17 Aug 2022 07:37 AM
Last Updated : 17 Aug 2022 07:37 AM

3.43 கோடி குழந்தைகளுக்கு ‘பால ஆதார்’ அட்டைகள்

புதுடெல்லி: நடப்பு நிதியாண்டின் முதல் 4 மாதங்களில் சுமார் 80 லட்சம் குழந்தைகள் பால ஆதார் திட்டத்தின் கீழ் சேர்க்கப்பட்டுள்ளனர். ஜூலை மாத இறுதிவரை நாடு முழுவதும் 3.43 கோடி குழந்தைகளுக்கு ஆதார் அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன.

பிறந்த குழந்தை முதல் 5 வயது வரையிலான குழந்தைகளுக்கு ‘பால ஆதார்’ திட்டத்தின் கீழ் ஆதார் அட்டைகள் வழங்கப்படுகின்றன. இதன் மூலம் பெற்றோரும் 5 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளும் பல்வேறு நன்மைகளைப் பெற உதவும் என்பதால் இத்திட்டத்தின் கீழ் 5 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளின் பெயர்களை பதிவு செய்ய தனித்துவ அடையாள ஆணையம் (யுஐடிஏஐ) ஊக்குவித்து வருகிறது.

அதன்படி, நடப்பு நிதியாண்டில் முதல் நான்கு மாதங்களில் 0-5 வயதுக்கு உட்பட்ட 79 லட்சத்துக்கும் அதிகமான குழந்தைகள் பாலஆதார் திட்டத்தின் கீழ் சேர்க்கப் பட்டுள்ளதாக மின்னணுவியல் மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் தெரிவித்துள்ளது.

கடந்த ஜூலை மாதம் இறுதி வரை பால ஆதார் திட்டத்தின் கீழ் 3.43 கோடி குழந்தைகளுக்கு ஆதார் அட்டை வழங்கப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

குழந்தைகளுக்கு 5 வயது ஆனதும் பெரியவர்களுக்கு ஆதார்வழங்கப்படும்போது எடுக்கப்படு வதுபோல பயோமெட்ரிக் முறையில் அவர்களின் கைரேகைகள் மற்றும் கருவிழிப் படலம் நகல் எடுக்கப்பட்டு, பால ஆதார் அட்டையில் இருக்கும் எண்கள் மாறாமல் வழக்கமான ஆதார் அட்டைகள் வழங்கப்படும்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x