Published : 17 Aug 2022 07:35 AM
Last Updated : 17 Aug 2022 07:35 AM

திருவனந்தபுரம் | ஆக்ஸிஜன் சிலிண்டருடன் தேர்வு எழுதிய பெண்மணி

திருவனந்தபுரம்: கேரளாவில் ஆக்ஸிஜன் சிலிண்டருடன் தேர்வு எழுதிய 50 வயதான பெண்மணியை பலரும் பாராட்டி வருகின்றனர்.

கேரளாவில் முதியோர் கல்வி திட்டத்தின் கீழ் கோட்டயம் மாவட்டம் கடுதுருத்தியைச் சேர்ந்த 50 வயதான சிமி மோள் என்ற பெண்மணி பிளஸ் 2-வுக்கு சமமான கல்வி பயின்று வந்தார். இதற்கான தேர்வு கடந்த 14-ந் தேதி அப்பகுதியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் நடந்தது. தேர்வுக்கு சில நாட்களே இருந்த நிலையில் சிமி மோளுக்கு நுரையீரல் பிரச்சினை கடுமையான மூச்சு திணறல் ஏற்பட்டது. இதற்காக அவரை உறவினர்கள் அருகில் உள்ள மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு ஆக்ஸிஜன் சிலிண்டருடன் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

எனினும், பிளஸ் 2-தேர்வை எழுதுவதில் சிமிமோள் உறுதியாக இருந்தார். இதையடுத்து அவரதுஉறவினர்கள் கடந்த ஞாயிற்று கிழமை, சிமிமோளை, ஆக்ஸிஜன் சிலிண்டர் உதவியுடன் தேர்வு அறைக்கு அழைத்து சென்றனர். அவரது நிலைமையை பார்த்த தேர்வு அதிகாரிகள், சிமி மோள் தேர்வு எழுத தனி அறை ஒதுக்கி கொடுத்தனர். அங்கு அவர் ஆக்ஸிஜன் சிலிண்டர் உதவியுடன் தேர்வு எழுதினார்.

நோய் பாதிப்புடன் முழுமையாக அவர் தேர்வை எழுதி முடித்தார். இதற்காக அவரை முதியோர் கல்வி திட்ட அதிகாரிகள் பெரிதும் பாராட்டினர். தேர்வு முடிந்த பின்புசிமிமோளை உறவினர்கள் ஆம்புலன்சில் ஏற்றி மீண்டும் மருத்துவ மனைக்குக் கொண்டு சென்றனர்.சிமி மோளின் கணவர் விமானப்படை வீரரான ஜோதிராஜ் 3 ஆண்டு களுக்கு முன் இறந்துவிட்டார். அவரது ஒரே மகள் அம்ரிதா, பெங்களூ ருவில் பல் மருத்துவம் படிக்கிறார்.

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

 
x