Published : 17 Aug 2022 07:36 AM
Last Updated : 17 Aug 2022 07:36 AM

2 வருடங்களுக்குப் பிறகு மீண்டும் அஸ்லான் ஷா ஹாக்கி தொடர்

இபோ: கரோனா பெருந் தொற்று காரணமாக நடத்தப்படாமல் இருந்த அஸ்லான் ஷா ஹாக்கி தொடர் இரண்டு வருடங்களுக்குப் பிறகு மீண்டும் நடத்தப்பட உள்ளது.மலேசியாவில் வரும் நவம்பர் 16 முதல் 25-ம் தேதி வரை இந்தத் தொடர் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

உலகத் தரவரிசையில் முதலிடத்தில் உள்ள ஆஸ்திரேலியா, 5-வது இடத்தில் உள்ள ஜெர்மனி, இந்தியா, நியூஸிலாந்து, கனடா ஆகிய நாடுகளுக்கு இந்தத் தொடரில் கலந்துகொள்ள அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

சுல்தான் அஸ்லான் ஷா கோப்பைக்கான இந்தத் தொடர் 1998-ம் ஆண்டு முதல் சர்வதேச ஹாக்கி கூட்டமைப்பின் வருடாந்திர போட்டி அட்டவணையில் இடம் பெற்று வருகிறது.

புகழ்பெற்ற ஹாக்கி ரசிகரும், சர்வதேச ஹாக்கி கூட்டமைப்பின் நிர்வாகக் குழு உறுப்பினருமான ஹெச்ஆர்ஹெச் சுல்தான் அஸ்லான் ஷாவின் நினைவாக இந்த ஹாக்கி தொடர் நடத்தப்பட்டு வருகிறது.

கடைசியாக இந்தத் தொடர் கடந்த 2019-ம் ஆண்டு நடத்தப்பட்டது. இறுதிப் போட்டியில் இந்தியாவை வீழ்த்தி தென் கொரியா கோப்பையை வென்றிருந்தது.

அதேவேளையில் தொடரின் சிறந்த வீரராக இந்தியாவின் சுரேந்தர் குமார் தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தார். அஸ்லான் ஷா கோப்பையை ஆஸ்திரேலிய 10 முறை வென்று சாதனை படைத்துள்ளது. இந்தியா 5 முறையும், பாகிஸ்தான், தென் கொரியா அணிகள் தலா 3 முறையும் பட்டம் வென்றுள்ளன.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x