Published : 17 Aug 2022 06:04 AM
Last Updated : 17 Aug 2022 06:04 AM

கோவில்பட்டி | செயற்கை நுண்ணறிவு படித்தால் வேலை உறுதி: ஜெயப்பிரகாஷ் ஏ.காந்தி வழிகாட்டல்

கோவில்பட்டி: கோவில்பட்டி, நேஷனல் பொறியியல் கல்லூரி “வெற்றிக்கு வழி” என்ற தலைப்பில் உயர்கல்வி வழிகாட்டல் நிகழ்ச்சியை நேற்று நடத்தியது. இதில் கல்வி ஆலோசகர் ஜெயப்பிரகாஷ் ஏ.காந்தி மாணவர்களிடையே கலந்துரையாடி ஆலோசனைகளை வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில் ஜெயப்பிரகாஷ் காந்தி பேசியதாவது: மாணவர்கள் தமிழகத்தில் மருத்துவ படிப்பில் சேர வேண்டும் என்றால் நீட் (NEET) தேர்வில் 585 மதிப்பெண்களுக்கு மேல் பெறவேண்டும். இந்தியாவிலேயே மீன்வளத்துறை சார்ந்த படிப்புகள் தமிழகத்தில் மட்டுமே உள்ளது. வணிகவியல் மற்றும் பட்டய கணக்காளர் பட்டய படிப்புகளுக்கும் நல்ல எதிர்காலம் உள்ளது.

தொழில்நுட்ப துறை கண்டுவரும் அதிவேக வளர்ச்சியில் பொறியியல் படிப்புகள் பெரும் பங்கு வகிக்கின்றன. அவற்றில், கணினி அறிவியல் மற்றும் பொறியியல், தகவல் தொழில்நுட்ப பொறியியல், செயற்கைநுண்ணறிவு மற்றும் தரவு அறிவியல்உள்ளிட்ட பொறியியல் துறைகள் வருங்காலங்களில் மிகப் பெரியஏற்றம் காணும்.

இந்த துறைகளைத்தேர்ந்தெடுத்துப் படிக்கும் மாணவர்களுக்கு வேலை வாய்ப்புமிகவும் பிரகாசமாக இருக்கும்.அடுத்து வரும் 4 ஆண்டு களில் கணினி அறிவியல்பொறியியலுடன் இணைந்த மின்னணுதொடர்பு பொறியியல் படிப்புகளுக்கு வேலை வாய்ப்புகள் நன்றாக இருக்கும்.

இவ்வாறு அவர் பேசினார்.

இந்நிகழ்ச்சியில், 18-க்கும் மேற்பட்ட பள்ளிகளில் இருந்து 1800-க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் கலந்துகொண்டனர். இந்நிகழ்ச்சியை கல்லூரி தாளாளர் கே.ஆர்.அருணாச்சலம், இயக்குநர் எஸ்.சண்முகவேல், முதல்வர் கே.காளிதாச முருகவேல் ஆகியோரின் வழிகாட்டுதலின்கீழ் அறிவியல் மற்றும் மானுடவியல் துறைத் தலைவர் எம்.ஏ.நீலகண்டன் மற்றும் அத்துறையைச் சேர்ந்த பேராசிரியர்கள் ஏற்பாடு செய்திருந்தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x