Published : 12 Aug 2022 06:02 AM
Last Updated : 12 Aug 2022 06:02 AM
சிவகங்கை: 75-வது சுதந்திர தினத்தையொட்டி சிவகங்கை அருகே இலுப்பக்குடி இந்தோ-திபெத் எல்லை பாதுகாப்பு படை பயிற்சி மையத்தில் காட்சிப்படுத்தப்பட்ட ராணுவ தளவாடங்களை பள்ளி, கல்லூரி மாணவர்கள் பார்வையிட்டனர்.
நாட்டின் 75-வது சுதந்திர தின விழாவையொட்டி ஆகஸ்டு 13 முதல் 15-ம் தேதி வரை வீடுகள் மற்றும் நிறுவனங்களில் தேசியக் கொடி ஏற்ற வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இது தொடர்பாக மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் பணியில் தபால் ஊழியர்கள், தன்னார்வலர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், 75-வது சுதந்திர தினவிழாவையொட்டி சிவகங்கை அருகே இலுப்பைக்குடி இந்தோ- திபெத் எல்லை பாதுகாப்புப் படை பயிற்சி மையத்தில் ராணுவ தளவாடங்கள் காட்சிப்படுத்தப்பட்டன. இந்நிகழ்ச்சிக்கு இந்தோ-திபெத் எல்லை பாதுகாப்புப் படை டிஐஜி ஆச்சல் சர்மா தலைமை வகித்தார்.
பள்ளி, கல்லூரி மாணவர்கள் ராணுவ தளவாடங்களை மிகுந்த ஆர்வத்தோடு பார்வையிட்டனர். அவர்களுக்கு ஆயுதங்களின் ரகங்கள், அவற்றை கையாளும் முறை, ராணுவப் பயிற்சிகள் குறித்து ராணுவ வீரர்கள் விளக்கினர். அதைத்தொடர்ந்து மலை ஏறுதல் உள்ளிட்ட சாகசங்களையும் செய்து காட்டினர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT