Published : 05 Aug 2022 06:34 AM
Last Updated : 05 Aug 2022 06:34 AM
கொல்கத்தா: கொல்கத்தாவில் உள்ள ஒரு தனியார் பள்ளி தனது மாணவர்களுக்கு விண்வெளி அறிவியலில் பயிற்சி அளிப்ப தற்காக நானோ செயற்கைக்கோளை ஏவவுள்ளது.
மேற்குவங்க மாநிலம் கொல்கத்தாவில் எம்பி பிர்லா குழுமத்தின் ஒரு அங்கமான சவுத் பாயிண்ட் உயர்நிலைப் பள்ளி, தனது மணவர்களுக்கு விண்வெளி அறிவியல் பயிற்சி அளிக்க நானோ செயற்கைக் கோளை விண்வெளியில் ஏவ இருக்கிறது. இப்பள்ளி தனது குழுமத்தின் முன்னாள் தலைவரான பிரியம்வதா பிர்லாவின் நினைவாக தனது செயற்கைக்கோளுக்கு பிரியம்வதா என்று பெயரிட முடிவு செய்துள்ளது.
இந்தியா சுதந்திரம் அடைந்த 75 ஆண்டுகளை நினைவுகூரும் வகையில் ‘ஆசாதி கா அம்ரித் மஹோத்சவ்' நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக இந்த திட்டம் உள்ளது, நானோ செயற்கைக்கோள் திட்டத்தில் 11 மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்கள் இணைந்து செயலாற்றுவார்கள் என்றும் இத்திட்டம் 9 மாதங்களுக்குப் பிறகு தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுவதாகவும் பள்ளி நிர்வாகக் குழுவின் துணைத் தலைவர் கிருஷ்ணா தமானி தெரிவித்தார்.
பிடிஐ செய்தி நிறுவனத்துக்கு கிருஷ்ண தமானி அளித்த பேட்டியின்போது கூறுகையில், ‘‘இது அறிவியலை அடிப்படையாகக் கொண்ட கல்வி மற்றும் அனுபவ அடிப்படையிலான கற்றல் ஆகியவற்றிற்கு அதிக முக்கியத்துவம் அளிப்பதை உறுதி செய்யும், மேலும் மாணவர்களிடம் கண்டுபிடிப்பு, படைப்பாற்றல் கலாச்சாரத்தை வளர்ப்பதற்கும், மேலும் விரிவடைந்து வரும் விண்வெளி அரங்கம் மற்றும் அதனுடன் தொடர்புடைய துறைகளில் உள்ள மாணவர்களின் எதிர்கால தலைமுறைக்கு புதிய உத்வே கத்தை அளிக்கும்’’ என்று தெரிவித்தார்.
இஸ்ரோ கண்காணிப்பு
நானோ செயற்கைகோளின் வடி வமைப்பு, மேம்பாடு, ஒருங்கிணைப்பு, தகுதித்திறன், சோதனை மற்றும் செயற்கைகோளை புவியில் இருந்துகுறுகிய தூரத்தில் உள்ள சுற்றுப் பாதைக்கு விண்ணில் ஏவுதல் ஆகியவை தொடர்பாக சவுத் பாயின்ட் பள்ளிக்கும் இந்திய தொழில்நுட்ப ஐக்கிய சங்கத்துக்கும் (ஐடிசிஏ) ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளது. இத்திட்டம் இஸ்ரோவால் கண்காணிக்கப்படும் என்றும் பள்ளி நிர்வாகம் அறிவித்துள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT