Published : 02 Aug 2022 06:38 AM
Last Updated : 02 Aug 2022 06:38 AM

பள்ளிகளில் தாய்மொழிக் கல்வி அவசியம்: குடியரசுத் துணைத் தலைவர் வலியுறுத்தல்

ஐதராபாத்: பள்ளிகளில் தாய்மொழி கற்பிக்கப் படுவது அவசியமானது என்று குடியரசுத் துணைத் தலைவர் வெங்கய்யா நாயுடு வலியுறுத்தி உள்ளார்.

தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தின் ராமந்தபூர் நகரில் உள்ள அரசு பள்ளி பொன்விழா கொண்டாட்டங்களை தொடங்கி வைத்து குடியரசுத் துணைத் தலைவர் வெங்கய்யா நாயுடு உரையாற்றினார்.

அப்போது அவர் பேசியதாவது: தேசியக் கல்விக் கொள்கையை முழுமையாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். ஆக்கப்பூர்வமான வகையில் மாணவர்களின் முழு வளர்ச்சி மற்றும் மேம்பாட்டை ஊக்குவிக்க வேண்டும். சில பள்ளிகள் மாணவர்கள் தாய்மொழியில் பேசுவதை இழிவாகப் பார்க்கின்றன, மேலும் ஆங்கிலத்தில் பிரத்தியேகமாகப் பேசவும் கற்கவும் அவர்களை ஊக்குவிக்கின்றன.

தாய் மொழியில் கல்வியை கற்றுக் கொள்வது, சுதந்திரமாக தொடர்பு கொள்ளஉதவும், சுயமரியாதையை அதிகரிக்கும். சொந்த கலாச்சார உணர்வை மாணவர்களுக்கு வழங்கும்.

முதன்மை நிலையில் உள்ள பயிற்றுமொழியை தாய்மொழிகளுக்கு மாற்றவும், படிப்படியாக உயர்நிலைக ளுக்கும் விரிவுபடுத்தவும் வேண்டும். நமது குழந்தைகளின் ஆளுமையை வடிவமைப்பதில் தாய்மொழியின் முக்கியத்துவத்தை தவிர்க்க முடியாது. நேரம் தவறாமை மற்றும் ஒழுக்கம் ஆகியவை வெற்றிக்கான மிக முக்கியமான பண்புகள்.

உயர் இலக்கை அடையவும், வாழ்க்கையில் முன்னேறவும் மாணவர்கள் கடினமாக உழைக்க வேண்டும். கடினஉழைப்புக்கு ஈடு இல்லை. வாழ்க் கையில் முன்னேற தங்களுக்கு அறிவையும் ஞானத்தையும் உயர்ந்த பண்புகளையும் கற்றுக் கொடுக்கும் ஆசிரியர்களை மாணவர்கள் போற்றி மதிக்க வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x