Published : 29 Jul 2022 06:10 AM
Last Updated : 29 Jul 2022 06:10 AM

அரசு பள்ளி மாணவர்களுக்கு வெளிநாட்டு கல்வி சுற்றுலா வாய்ப்புகள்: போட்டிகளை நடத்த தயாராகும் பள்ளிக்கல்வித்துறை

சென்னை: அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள் வெளிநாட்டு கல்வி சுற்றுலா செல்வதற்கு பல்வேறு போட்டிகள் நடப்பு கல்வி ஆண்டில் அடுத்தடுத்து நடத்த பள்ளிக் கல்வித்துறை தயாராகி வருகிறது.

பள்ளிக்கல்வி ஆணையர் கே.நந்தகுமார் ஒரு சுற்றறிக்கை அனுப்பியுள்ளார். அதில் இடம்பெற்றுள்ள முக்கிய அம்சங்கள் பின்வருமாறு:

l பள்ளி அளவில் கல்வி மற்றும் இணைச் செயல்பாடுகளான மன்றச் செயல்பாடுகள், நூல் வாசிப்பு, நுண் கலைகள், விளையாட்டு மற்றும் அறிவியல் ஆகியவற்றில் சிறந்து விளங்கும் மாணவர்கள் உலக அளவிலும், தேசிய, மாநில அளவிலும் புகழ்பெற்ற இடங்களுக்கு கல்வி சுற்றுலா அழைத்துச் செல்லப்படுவர்.

l பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள் இடையே கல்வி இணைச் செயல்பாடுகளை ஊக்குவிக்க பல்வேறு காலகட்டங்களில் இலக்கியம், கவின்கலை, சூழலியல் உள்ளிட்ட மாணவர் மன்றங் கள் மீண்டும் புதுப்பித்து சிறப்பாக செயல்பட வழிவகை செய்யப்படும்.

l மாறி வரும் தொழில்நுட்ப மாற்றங்களுக்கு ஏற்ப அரசு பள்ளி மாணவர்களுக்கு தொழில் நுட்ப அறிவு மற்றும் கணினி மொழி மீதான ஆர்வத்தை ஏற்படுத்த கணினி நிரல் மன்றங்கள் மற்றும் எதிர்கால தொழில்நுட்பமான ரொபோட்டிக்ஸ் கற்றுக்கொள்ள ரொபோட்டிக்ஸ் மன்றங்கள் ஏற்படுத்தப்படும். மேலும் இணைய பாதுகாப்பு மற்றும் எத்திக்கல் ஹேக்கிங் பயிற்சி அளிக்கப்பட்டு ஆண்டுதோறும் ஹேக்கத்தான் போட்டிகள் நடத்தப்படும்.

l அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களின் பெற்றோரை ஒவ்வொரு மாதமும் பள்ளிக்கு வரவழைத்து மாணவர்களின் உடல் நலம், கற்றல் நிலை, விளையாட்டு, வாசிப்புத்திறன் மன்ற செயல்பாடுகளில் பங்கேற்பு உள்ளிட்ட அனைத்து நிகழ்வுகள் குறித்தும் எடுத்துரைக்கப்படும்.

அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் நடுநிலைப்பள்ளிகள், உயர்நிலைப்பள்ளிகள், மேல்நிலைப்பள்ளி களில் 6 முதல் 12-ம் வகுப்பு படிக்கும் அனைத்து மாணவர்களும் கல்வி சாரா செயல்பாடுகளை ஆர்வத்தோடு பங்கேற்கும் வகையில் பின்வரும் மன்றங்கள் புதுப்பிக்கப்படுகிறது.

இலக்கிய மன்றம் (தமிழ், ஆங்கிலம்), சுற்றுச் சூழல் மன்றம், வினாடி வினா மன்றம், தொன்மை பாதுகாப்பு மன்றம், நுகர்வோர் மன்றம், தகவல் தொழில்நுட்ப மன்றம், வாக்காளர் விழிப்புணர்வு மன்றம், குழந்தை உரிமைகள் பாதுகாப்பு மன்றம், திரைப்பட மன்றம், சாரண சாரணியர் இயக்கம், தேசிய மாணவர் படை, நாட்டுநலப் பணி திட்டம், இளம் செஞ்சிலுவை சங்கம், செஞ்சுருள் சங்கம் ஆகியவை செயல்படுகின்றன.

ஒவ்வொரு மாணவரும் தங்கள் விருப்பத்துக்கு ஏற்ப வெவ்வேறு மன்றங்களில் பங்கேற்க ஊக்கப்படுத்த வேண்டும். இலக்கிய மன்ற செயல்பாடுகளில் சிறந்து விளங்கும் 15 மாணவர்கள் வெளிநாடுகளுக்கு கல்வி சுற்றுலாவுக்கு அழைத் துச் செல்லப்படுவர். மாநில அளவில் வெற்றிபெறும் மாணவர்களுக்கு கவிமணி விருது வழங்கப்படும்.

வினாடி-வினா போட்டியில் மாநில அளவில் வெற்றிபெறும் 20 மாணவர்கள் வெளிநாடுகளுக்கு கல்வி சுற்றுலா செல்லலாம்.

மாநில அளவில் பள்ளி புத்தாக்க திட்ட போட்டிக ளில் வெற்றிபெறும் மாணவர்களுக்கு இளம் கண்டுபிடிப்பாளர் விருது வழங்கப்படும். ரொபோட்டிக்ஸ் மன்றங்களில் சிறந்து விளங்கும் 10 மாணவர்கள் வெளிநாடுகளுக்கு கல்வி சுற்றுலா வாய்ப்பு பெறுவர்.

எழுத்தாற்றலில் சிறந்து விளங்கும் மாணவர்களுக்கு மாநில அளவில் போட்டி நடத்தப்பட்டு அதில் வெற்றிபெறும் 15 மாணவர்கள் வெளிநாடுகளுக்கு கல்வி சுற்றுலா அழைத்துச் செல்லப்படுவர். மேலும், மாநில அளவிலான கலைத் திருவிழாவில் வெற்றிபெறும் 20 மாணவர்கள் வெளிநாடுகளுக்கு கல்வி சுற்றுலா செல்லலாம்.

இவ்வாறு சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Sign up to receive our newsletter in your inbox every day!

 
x