Published : 29 Jul 2022 07:01 AM
Last Updated : 29 Jul 2022 07:01 AM

5 ஆயிரத்துக்கும் அதிகமான வீரர்கள் பங்கேற்பு

இங்கிலாந்து பர்மிங்ஹாமில் காமன்வெல்த் போட்டி தொடக்கத்தை முன்னிட்டு நடனக் கைலஞர்கள் வரேவற்பு நடனத்தை நிகழ்த்தினர். இந்த போட்டியில் 72 நாடுகளில் இருந்து 5,054 விளையாட்டு வீரர், வீராங்கைனகள் பல்வேறு பிரிவுகளில் கலந்து கொள்கின்றனர்.

பர்மிங்ஹாம்: இங்கிலாந்தின் பர்மிங்ஹாம் நகரில் 22-வது காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகள் நேற்று (ஜூலை 28) தொடங்கியது. ஆகஸ்ட் 8-ம் தேதி வரை இப்போட்டிகள் நடைபெறவுள்ளன. 5 ஆயிரத்துக்கும் அதிகமான வீரர், வீராங்கனைகள் இப்போட்டியில் பங்கேற்க இருக்கிறார்கள்.

காமன்வெல்த் விளையாட்டுப் போட்டி 1930-ம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டது. ஒலிம்பிக் மற்றும் ஆசிய விளையாட்டை போல காமன்வெல்த் போட்டி 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெற்று வருகிறது. கடைசியாக காமன்வெல்த் விளையாட்டு போட்டி ஆஸ்திரேலியாவில் உள்ள கோல்டுகோஸ்ட் நகரில் 2018-ம் ஆண்டு நடைபெற்றது.

இந்நிலையில் பர்மிங்ஹாமில் நேற்று தொடங்கிய காமன்வெல்த் போட்டியில் 72 நாடுகளில் இருந்து 5,054 விளையாட்டு வீரர், வீராங்கனைகள் பல்வேறு பிரிவுகளில் கலந்து கொள்கின்றனர். முதல் முறையாக காமன்வெல்த் போட்டியில் மகளிர் கிரிக்கெட் விளையாட்டும் சேர்க்கப்பட்டுள்ளது.

ட்கபாஸ்டனில் உள்ள கிரிக்கெட் மைதானத்தில் கிரிக்கெட் போட்டிகள் நடத்தப்படுகின்றன. கடந்த 2018-ம் ஆண்டு ஆஸ்திரேலியாவின் கோல்ட் கோஸ்ட் நகரில் நடைபெற்ற காமன்வெல்த் போட்டியில் இந்தியா 26 தங்கம், 20 வெள்ளி, 20 வெண்கலம் என 66 பதக்கங்களை வென்றது. இந்தமுறை அதைவிட கூடுதல் பதக்கங்களை வெல்லும் முனைப்பில் இந்திய அணி களமிறங்கியுளளது.

இந்த போட்டிகளில் இந்தியாவில் இருந்து மொத்தம் 19 பிரிவுகளில் 141 போட்டிகளில் 215 விளையாட்டு வீரர்களும், வீராங்கனைகளும் பங்கேற்க உள்ளனர். பேட்மிண்டன் வீராங்கனை பி.வி. சிந்து, பளுதூக்கும் வீராங்கனை மீராபாய் சானு, பளுதூக்கும் வீரர் பஜ்ரங் பூனியா, டேபிள் டென்னிஸ் வீராங்கனை மணிகா பத்ரா, குத்துச்சண்டை வீராங்கனை லோவ்லினா போர்கோஹைன் ஆகியோர் தங்களது பிரிவுகளில் பதக்கம் வென்று இந்தியாவுக்கு பெருமை சேர்ப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

தொடக்க விழா நிகழ்ச்சிகள் இந்திய நேரப்படி நேற்று இரவு நடைபெற்றது. அலெக்சாண்டர் ஸ்டேடியத்தில் நடைபெற்ற இந்தத் தொடக்க விழாவில் சுமார் 30,000 பார்வையாளர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டது. ஆகஸ்ட் 8-ம் தேதி போட்டி நிறைவு விழா நடைபெறவுள்ளது.

Sign up to receive our newsletter in your inbox every day!

 
x