Published : 26 Jul 2022 06:15 AM
Last Updated : 26 Jul 2022 06:15 AM

உங்கள் குழந்தைகள் சமச்சீர் கல்வி கற்கிறார்களா? - தமிழக அரசியல்வாதிகளுக்கு தமிழிசை சவுந்தரராஜன் கேள்வி

புதுச்சேரி: தமிழக அரசியல்வாதிகளின் குழந்தைகள் எத்தனை பேர் சமச்சீர் கல்வி கற்கிறார்கள்? உங்கள் வீட்டுக் குழந்தைகள் படிக்கக்கூடாத கல்வியை ஏழை, எளிய வீட்டு குழந்தைகள் படிக்க வேண்டும் என்று திணிக்கிறீர்கள்.

புதிய கல்விக் கொள்கை மூலம் அனைவரும் ஏற்றம் பெறுவது உறுதி என்று புதுச்சேரி துணைநிலை ஆளுநர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்தார்.

புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை நேற்று வெளியிட்ட செய்திக் குறிப்பு: ஆளுநர்கள் அரசியலமைப்புக்கு உட்பட்டு கூறும் கருத்துக்களை அரசியலாக்கு வதுதான் தவறு. மாணவர்களுக்கு நல்லகருத்துக்களை விதைக்க வேண்டியபட்டமளிப்பு விழாக்களை அரசியலாக்கு வதுதான் தவறு. மீம்ஸ்களுக்கு அஞ்சுபவர் நான் அல்ல. ஆளுநர் பதவி அலங்காரப் பதவி அல்ல.

தெருவோர குடிமகனுக்கும் அரசியலமைப்பின்படி கிடைக்க வேண்டிய உரிமைகளை சிலர் மொழிவெறி கொண்டு தடுக்கும் போது அதை கண்டிப்பதும், காப்பதும் ஆளுநரின் கடமைதான். ஏழை, எளிய மாணவர்கள் கல்வி கற்க குறைவான கட்டணத்தில் உயரிய கல்வி பெற சேவை புரியும் நவோதயா பள்ளிகள் என் தாய் தமிழகத்தில் இல்லையே என்று ஏங்குவதில் என்ன தவறு? இதே நவோதயா பள்ளிகள் புதுச்சேரியிலும், காரைக்காலிலும் சிறப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன.

இங்கே நுழைவுத்தேர்வு வேண்டாம் என்கிறார்கள். இந்த காலக்கட்டத்தில் உலகம் முழுவதும் நுழைவுத்தேர்வுகள் உண்டு. ஏன் இங்கேயும் எல்.கே.ஜி வகுப்பில் பிள்ளைகளை சேர்க்க பெற்றோ ருக்கு நுழைவுத்தேர்வு வைக்கும் நிலை வந்துவிட்டது. நுழைவு தேர்வே வேண்டாம் என்பதே சமூக நீதியா என்று தெரியவில்லை .

இங்கே தமிழகத்தில் என்ன நடக் கிறது என்பது கண்கூடாக பார்த்துக் கொண்டுதான் இருக்கிறோம். ஏழைக்கு ஒரு கல்வி, பணக்காரர்களுக்கு ஒரு கல்வி.

தமிழக அரசியல்வாதிகளின் குழந்தை கள் எத்தனை பேர் சமச்சீர் கல்வி கற்கிறார்கள் என்பதை பட்டியலிடுங்்கள் பார்க்கலாம். உங்கள் வீட்டு குழந்தைகள் படிக்கக்கூடாத கல்வியை ஏழை, எளிய வீட்டு குழந்தைகள் படிக்க வேண்டும் என்று திணிக்கிறீர்கள்.

ஹிந்தி மொழியை எதிர்ப்பதாகவும், தமிழை வளர்ப்பதாகவும் சொல்லி இன்னும் எவ்வளவு காலம்தான் மக்களை ஏமாற்ற முடியும். புதிய கல்விக் கொள்கையிலும் தாய் மொழிக்குத்தான் முக்கியத்துவம் தரப்பட்டுள்ளது.

தனிநபர் விமர்சனங்களை வைக்க வேண்டாம். கருத்தை கருத்தால் எதிர் கொள்ளுங்கள் பதில் சொல்கிறேன்.

இவ்வாறு தமிழிசை தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x