

மதுரை: தமிழகத்தில் அரசு பள்ளிகளில் காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களில் தற்காலிக ஆசிரியர்கள் நியமிக்கும் அரசின் முடிவை எதிர்த்து ஆசிரியர் தகுதித் தேர்வில் வெற்றி பெற்று ஆசிரியர் பணிக்காக பல ஆண்டுகளாக காத்திருக்கும் பலர் சென்னை உயர் நீதிமன்றத்திலும், உயர் நீதிமன்ற மதுரை கிளையிலும் வழக்கு தொடர்ந்தனர்.
இந்த வழக்குகளில் சென்னை உயர் நீதிமன்றம் தற்காலிக ஆசிரியர் நியமனத்திற்கு அனுமதி வழங்கியது. ஆனால் உயர் நீதிமன்ற மதுரை கிளை தற்காலிக ஆசிரியர் நியமனத்துக்கு தடை விதித்தது.
இதையடுத்து, "தற்காலிக ஆசிரியர் நியமன வழக்கில் சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்பும், உயர் நீதிமன்ற மதுரை கிளையின் தீர்ப்பும் முரண்பட்டுள்ளதால், இந்த வழக்குகளை தலைமை நீதிபதி முன்பு பதிவாளர் பட்டியலிட வேண்டும்" என்று நீதிபதி எம்.எஸ்.ரமேஷ் உத்தரவிட்டுள்ளார்.