Published : 15 Jul 2022 06:24 AM
Last Updated : 15 Jul 2022 06:24 AM

தனியார் பள்ளிகளை மிஞ்சவேண்டும் அரசு பள்ளிகள் : தமிழிசை சவுந்தரராஜன் அறிவுறுத்தல்

தனியார் பள்ளிகளுக்கு மேலாக அரசுப் பள்ளிகளை மேம்படுத்த வேண்டும் என்பதே அரசின் நோக்கம் என்று புதுச்சேரி துணை நிலை ஆளுநர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் கூறினார்.

காரைக்கால் நகராட்சி, மாவட்ட நாட்டு நலப்பணித் திட்டம், "ஹேண்ட் இன் ஹேண்ட்" நிறுவனம் ஆகியவை இணைந்து காரைக் கால் கடற்கரையில் தூய்மைப் பணியை மேற்கொண்டன.

துணை நிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன், காரைக்கால் மாவட்ட ஆட்சியர் எல்.முகமது மன்சூர், முதுநிலைக் காவல் கண்காணிப்பாளர் ஆர்.லோகேஸ்வரன் மற்றும் அதிகாரிகள், மாணவ, மாணவிகள் பங்கேற்று கடற்கரை யில் தூய்மைப் பணி மேற்கொண்டனர்.

பின்னர், பல்வேறு பள்ளிகளில் ஆய்வு மேற்கொண்ட துணை நிலை ஆளுநர்செய்தியாளர்களிடம் கூறும்போது,

‘‘புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளைத்தூய்மையான, பசுமையான பகுதிகளாகமாற்ற அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படுகின்றன. கடற்கரையில் உள்ளபொழுதுபோக்கு அம்சங்கள் சீரமைக்கப்படும்.

அரசுப் பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கை அதிகமாக இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. தனியார் பள்ளிகளுக்கு மேலாக அரசுப் பள்ளிகளின் தரத்தை உயர்த்த வேண்டும் என்பதுதான் அரசின் நோக்கம்’’ என்றார்.

Sign up to receive our newsletter in your inbox every day!

 
x