Published : 06 Jul 2022 06:56 AM
Last Updated : 06 Jul 2022 06:56 AM
புதுடெல்லி: கஜகஸ்தானின் நூர்-சுல்தான் நகரில் எலோர்டா கோப்பை குத்துச்சண்டை போட்டி நடைபெற்றது. இதில் இந்தியாவின் அல்ஃபியா பதான் 81 கிலோ எடைப் பிரிவு இறுதி சுற்றில் கஜகஸ்தானின் லாசத் குங்கீபயேவாவை 5-0 என்ற கணக்கில் வீழ்த்தி தங்கப் பதக்கம் வென்றார்.
48 கிலோ எடைப் பிரிவில் இந்தியாவின் கிதிகா, சகநாட்டைச் சேர்ந்த கலைவாணி னிவாசனை எதிர்த்து விளையாடினார். இதில் கிதிகா 4-1 என்ற கணக்கில் வெற்றி பெற்று தங்கம் வென்றார். சென்னையை சேர்ந்த கலைவாணி, வெள்ளிப் பதக்கம் பெற்றார்.
54 கிலோ எடைப் பிரிவில் இந்தியாவன் ஜமுனா போரா 0-5 என்ற கணக்கில் உஸ்பெகிஸ்தானின் நிகினா உக்தமோவாவிடம் தோல்வியடைந்து வெள்ளிப் பதக்கம் பெற்றார். நேற்று முன்தினத்துடன் முடிவடைந்த இந்தத் தொடரில் இந்தியா 2 தங்கம், 2 வெள்ளி, 10 வெண்கலத்துடன் மொத்தம் 14 பதக்கங்கள் வென்றது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT