Published : 04 Jul 2022 06:38 AM
Last Updated : 04 Jul 2022 06:38 AM

மாணவருக்கு இலவச பாடப் புத்தகம்: திருப்பதி தேவஸ்தானம் ரூ.16 கோடியை வழங்க ஆந்திர அரசு கோரிக்கை

திருப்பதி: கல்லூரி மாணவர்களுக்கு இலவசமாக பாடப் புத்தகங்கள் வழங்குவதற்காக ரூ.16 கோடியை வழங்க வேண்டும் என்று திருப்பதி தேவஸ்தானத்துக்கு ஆந்திர அரசு கடிதம் எழுதி உள்ளது.

ஆந்திராவில் கோடை விடுமுறை முடிந்து கல்லூரிகள் திறக்கப்பட்டுள்ளன. ஒவ்வாரு ஆண்டும் கல்லூரி மாணவர்களுக்கு இலவசமாக பாடப் புத்தகங்கள் வழங்கப்படுகின்றன. இந்த ஆண்டு நிதி நெருக்கடி காரணமாக மாணவர்களுக்கு இலவச பாடப் புத்தகங்கள் வழங்க முடியவில்லை என்று ஆந்திர பள்ளிக் கல்வித் துறை தெரிவித்துள்ளது.

இதனால், கடந்த ஆண்டில் கல்லூரி முடித்துச் சென்ற மாணவர்களிடம் இருந்து அவர்கள் பயன்படுத்திய புத்தகங்கள் திரும்பப் பெறப்பட்டு அவற்றை தற்போது படிக்கும் கல்லூரி மாணவர்களுக்கு வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

கல்லூரி மாணவர்களுக்கு இலவசமாக பாடப் புத்தகங்கள் வழங்குவற்கு மாநில அரசுக்கு ஒரு ஆண்டுக்கு ரூ.16 கோடி நிதி தேவைப்படுகிறது. தற்போது நிதிப்பற்றாக்குறை உள்ளதால், மாணவர்களுக்கு இலவசமாக புத்தகங்கள் வழங்குவதற்காக ரூ.16 கோடி நிதியை திருப்பதி தேவஸ்தானம் அளிக்க வேண்டும் என்று ஆந்திர அரசு கோரிக்கை விடுத்துள்ளது. இந்தக் கோரிக்கையை கடிதம் மூலம் திருப்பதி தேவஸ்தானத்துக்கு ஆந்திர அரசு தெரிவித்துள்ளது.

திருப்பதி தேவஸ்தானத்துக்கு ஆந்திர அரசு எழுதியுள்ள கடிதத்தில், ‘ஆந்திராவில் மொத்தம் 452 கல்லூரிகள் உள்ளன. இதில் படிக்கும் மாணவர்களுக்கு இலவசமாக பாடப் புத்தகங்கள் வாங்க தேவஸ்தானம் ரூ. 16 கோடி நிதி வழங்க வேண்டும். பக்தர்களுக்கு இலவசமாக அன்னதானம், லட்டு ஆகியவற்றை அன்னபிரசாதம் திட்டத்தின் கீழ் தேவஸ்தானம் வழங்கி வருகிறது.

அதேபோல, அந்தத் திட்டத்தின் கீழ் ரூ.16 கோடியை வழங்க வேண்டும்’’ என்று கோரியுள்ளது. இதுகுறித்து தேவஸ்தான கூட்டத்தில் ஆலோசித்து நல்ல முடிவு எடுக்கப்படும் என்று திருப்பதி தேவஸ்தான அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x