Published : 04 Nov 2021 03:11 AM
Last Updated : 04 Nov 2021 03:11 AM

‘இந்து தமிழ் திசை’, சங்கர் ஐஏஎஸ் அகாடமி இணைந்து நடத்திய ‘ஆளப்பிறந்தோம்’ வழிகாட்டு நிகழ்ச்சி; தொடர் முயற்சியும், முறையான தயாரிப்பும் இருந்தால் யுபிஎஸ்சி தேர்வில் வெற்றி நிச்சயம்: சமீபத்திய தேர்வில் சிறப்பிடம் பெற்ற தமிழக இளம் வெற்றியாளர்களின் அனுபவப் பகிர்வு

‘இந்து தமிழ் திசை’ நாளிதழ், சங்கர் ஐஏஎஸ் அகாடமியுடன் இணைந்து யுபிஎஸ்சி, டிஎன்பிஎஸ்சி தேர்வுகளுக்கான ‘ஆளப்பிறந்தோம்’ இணையவழி வழிகாட்டு நிகழ்ச்சியை கடந்த ஞாயிற்றுக்கிழமை நடத்தின.

இதில், சமீபத்திய தேர்வில் அகில இந்திய அளவில் சிறப்பிடம் பெற்ற தமிழகத்தைச் சேர்ந்த இளம் வெற்றியாளர்கள் கலந்துகொண்டு சிவில் சர்வீஸ் தேர்வுமுறை மற்றும் அதற்கான தயாரிப்பு குறித்து மாணவ, மாணவிகள் இடையே உரையாற்றினர். கருத்தாளர்களின் உரை விவரம் வருமாறு:

யுபிஎஸ்சி 2020 தேர்வில் 157-வது இடம்பிடித்த சென்னையைச் சேர்ந்த ஏ.கேத்தரின் சரண்யா: நான் பி.ஜி படிக்கும்போதே சங்கர் ஐஏஎஸ் அகாடமியில் பிரிலிம்ஸ் மற்றும் மெயின்ஸ் எக்ஸாமுக்கான கிளாஸூக்கு போனேன். அப்ப கிளாஸ் நோட்ஸ் ரெகுலரா எடுத்து,அதைப் படிப்பேன். ஒவ்வொரு பாடத்துக்கும் ஒரு நோட்ஸ் போட்டு, அதை ஃபாலோ பண்ணினேன். அதுக்கப்புறம் அந்தந்த பாடத்துக்கான ஸ்டாண்ட்டர்டு புக்ஸை படிப்பேன். படிக்கும்போதே நோட்ஸூம்எடுப்பேன். 2019-ல் பிரிலிம்ஸ் தேர்வுக்குத் தயாரானேன். சங்கர் ஐஏஎஸ்அகாடமியில் 50-க்கும் மேற்பட்ட டெஸ்ட்களை எழுதினேன்.

2011 முதல் 2019 வரை கேட்கப்பட்ட கேள்வித்தாள்களில் என்னமாதிரியான லாஜிக் இருக்கிறது, அதில் என்ன டிரெண்ட்டிலே இருக்கு, என்ன மாதிரியான லாஜிக்அப்ளை பண்ணலாம் என்பதையெல்லாம் முன்னரே பார்த்துக்கொண்டேன். என்னோட அனைத்துவிதமான தயாரிப்புகளுக்கும் முதுகெலும்பாக இருந்தது ‘தி இந்து’ பேப்பர்தான். நான் ரெகுலரா படிச்சேன். கரண்ட் அஃபையர்ஸ் தெரிஞ்சிக்கணும்னா கட்டாயம் ‘தி இந்து’ படிக்கணும். முயற்சி செய்து எழுதினால் அனைவராலும் வெற்றிபெற முடியும்.

யுபிஎஸ்சி 2020 தேர்வில் 344-வது இடம்பிடித்த தேனியைச் சேர்ந்த எம்.அருண் பாண்டியநாதன்: டெல்லியிலுள்ள யுனிவர்சிட்டி ஒன்றில் ஸ்காலர்ஷிப் உதவியுடன் நான் படித்துக் கொண்டிருக்கும்போது தான், கலெக்டர் ஆகணும்னா யுபிஎஸ்சி தேர்வு எழுதணும்னு நான் தெரிஞ்சுக்கிட்டேன். இன்ஜினீயரிங் படிச்சு முடிச்சிட்டு, வேலைக்குப் போகணுங்கிற எண்ணத்திலேதான் முதலில் நான் படிச்சேன். குடும்பச் சூழல் காரணமாக வேலையில் சேர்ந்த நான், ஓராண்டுக்குப் பிறகு, எனது பெற்றோரிடம் எனது விருப்பத்தை தெரிவித்தேன்.

ஆரம்பத்தில் எனக்கு வழிகாட்ட யாருமில்லை. கூகுளில் தேடிப் பார்த்துதான் தகவல்களைத் தெரிந்துகொண்டேன். 2016-ம் ஆண்டில் சங்கர் ஐஏஎஸ் அகாடமியில் சேர்ந்தேன். யுபிஎஸ்சி தேர்வுக்காக நாம்குறைந்தது ஓராண்டாவது தொடர்ந்து படிக்க வேண்டுமென்பதை நான் தெரிந்துகொண்டேன்.

பிரிலிம்ஸ், மெயின்ஸ், இண்டர்வியூ என பல கட்டங்களைக் கொண்ட இந்த யுபிஎஸ்சி தேர்வுக்கு ஓராண்டுகளுக்கு முன்பிருந்தே முறையாக திட்டமிட்டு, நோட்ஸ் எடுப்பது, சிலபஸை முடிப்பது ஆகியவற்றை செய்ய வேண்டும். 2017-ம் ஆண்டில் பிரிலிம்ஸ் கிளியர் செய்துவிட்டேன். மெயின்ஸ் ஒரு மாதம் இருக்கும்போது எனக்கு டைபாய்டு வந்துவிட்டது. அதற்கு ஓராண்டுகளுக்கு முன்பிருந்தே நான் தயார் செய்தவை அனைத்தும் வீணாகிவிட்டன. தேர்வுக்குதயாராவதோடு. நம் உடல்நலனையும் பார்த்துக்கொள்ள வேண்டும் என்பதை அப்போதுதான் புரிந்துகொண்டேன்.

எனக்கு இதுவொரு லாங்க் புராசஸ். லேசான மனச்சோர்வு ஏற்பட்ட போதும், நாம் நினைத்ததைச் சாதிக்க வேண்டுமென்ற எண்ணத்தில் அடுத்த அட்டெம்ட்டைச் சிறப்பாகச் செய்தேன். எனக்கு திருமணம்முடிந்த பின்னர்தான் பர்சனாலிட்டிடெஸ்ட் எனப்படும் நேர்காணலுக்குச் சென்று வெற்றிபெற்றேன்.

சங்கர் ஐஏஎஸ் அகாடமி மூத்தபயிற்சியாளர் சந்துரு: 2004-ம்ஆண்டு டிச.4-ல் சங்கர் ஐஏஎஸ் அகாடமி, இதன் நிறுவனர் சங்கரால் தொடங்கப்பட்டது. தொடக்கத்தில் 36 மாணவர்களோடு இது தொடங்கப்பட்டது. இன்றைக்கு ஆண்டுதோறும் 3,000-க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு பயிற்சியளிக்கும் நிறுவனமாக வளர்ந்திருக்கிறது. ஐஏஎஸ், ஐபிஎஸ், ஐஎஃப்எஸ் உள்ளிட்ட அனைத்து உயர் பதவிகளுக்குமான தேர்வுகளில் 1,500-க்கும் மேற்பட்ட மாணவர்களை வெற்றியடைய வைத்திருக்கிறோம்.

முதல்நிலைத் தேர்வு, முதன்மைத் தேர்வு, ஆளுமைத் தேர்வு என மூன்று நிலைக்குமான பயிற்சிகள் அளிக்கப்படுகின்றன. சிவில் சர்வீஸ் தேர்வில் வெற்றிபெற, விடாமுயற்சி மிகவும் அவசியம். மாதிரித் தேர்வுகளைத் தொடர்ந்து எழுதிப் பார்க்க வேண்டும். தேர்வுக்கான கேள்விகளை முதலில் நன்கு புரிந்துகொண்டு, அதற்கேற்ப விடையளிக்க வேண்டும். எதையும் குழப்பத்தோடு எழுதாமல், தேவையான தரவுகளையும், பொருத்தமான விஷயங்களையும் அளிப்பதன் மூலம் நல்ல மதிப்பெண்ணுடன் வெற்றி பெறலாம்.

இவ்வாறு அவர்கள் தெரிவித் தனர்.

இதைத் தொடர்ந்து, சிவில் சர்வீஸ் தேர்வு தொடர்பாக, மாணவமாணவிகளின் கேள்விகளுக்கு கருத்தாளர்கள் விளக்கம் அளித்தனர். இந்நிகழ்ச்சியை ‘இந்து தமிழ் திசை’ முதுநிலை உதவி ஆசிரியர் மு.முருகேசன் தொகுத்து வழங்கினார். இந்த நிகழ்ச்சியை தவற விட்டவர்கள் https://www.youtube.com/watch?v=Hpax65fTj6I என்ற லிங்க்கில் பார்த்து பயன்பெறலாம்.

Sign up to receive our newsletter in your inbox every day!

 
x