Published : 27 Oct 2021 03:08 AM
Last Updated : 27 Oct 2021 03:08 AM

எஸ்எஸ்சி தேர்வுக்கு இலவச பயிற்சி வகுப்பு: வேலைவாய்ப்பு பயிற்சித் துறை சார்பில் நாளை தொடங்குகிறது

சென்னை

தமிழக அரசின் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை இயக்குநர் கொ.வீரராகவ ராவ் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பு:

எஸ்எஸ்சி (பணியாளர் தேர்வாணையம்) நடத்தவுள்ள பட்டப் படிப்பு தகுதியான போட்டித் தேர்வுக்கு வேலைவாய்ப்பு பயிற்சித் துறை சார்பில் இலவச பயிற்சி அளிக்கப்பட உள்ளது. பயிற்சி வகுப்பு சென்னை கிண்டியில் உள்ள மாநில தொழில் மற்றும் செயல் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் 28-ம் தேதி (நாளை) காலை 10.30 மணிக்கு தொடங்குகிறது. பயிற்சியின்போது பாடக்குறிப்புகள் வழங்கப்படுவதுடன் மாதிரி தேர்வுகளும் நடத்தப்படும்.

எனவே, போட்டித் தேர்வுக்கு தயாராகும் இளைஞர்கள் தங்கள் பெயர் மற்றும் கல்வித்தகுதியை குறிப்பிட்டு peeo.chn@tn.gov.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அல்லது 94999-66028 என்ற வாட்ஸ்-அப் எண்ணுக்கு தகவல் அனுப்பி பயிற்சியில் சேரலாம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x