Published : 20 Oct 2021 03:07 AM
Last Updated : 20 Oct 2021 03:07 AM

பொறியியல் துணை கலந்தாய்வு: ஆன்லைனில் இன்று நடைபெறுகிறது

சென்னை

பொறியியல் மாணவர் சேர்க்கைக்கான துணை கலந்தாய்வு ஆன்லைனில் இன்று நடைபெற உள்ளது.

பொறியியல் கல்லூரி மாணவர் சேர்க்கையில் சிறப்பு பிரிவினருக்கான ஆன்லைன் கலந்தாய்வு கடந்த செப்.15 முதல் 24-ம் தேதி வரை நடந்தது. இதன்மூலம் 6,442 பேர் ஒதுக்கீடு ஆணை பெற்றனர்.

62,783 இடங்கள் காலி

இதைத் தொடர்ந்து, பொதுக்கலந்தாய்வு செப்.27 முதல் அக்.17வரை 4 கட்டங்களாக நடத்தப் பட்டது. முதல்கட்ட கலந்தாய்வு மூலம் 89,187 இடங்கள் நிரம்பி யுள்ளன. இன்னும் 62,783 இடங் கள் காலியாக உள்ளன.

இந்நிலையில், புதிதாக விண்ணப்பிப்பவர்களுக்காக அக். 20-ம்தேதி துணை கலந்தாய்வு நடத்தப்படுவதாகவும், இதற்கு 19-ம் தேதிவரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என்றும் தொழில்நுட்பக் கல்வி இயக்ககம் அறிவித்தது.

அக்.23-ல் கல்லூரி ஒதுக்கீடு

அதன்படி, துணை கலந்தாய்வுக்கு ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான அவகாசம் நேற்றுடன் முடிவடைந்தது. ஏற்கெனவே அறிவிக்கப்பட்டபடி, துணை கலந்தாய்வுக்கான தரவரிசை பட்டியல் 20-ம் தேதி (இன்று)வெளியிடப்பட்டு, ஆன்லைன் கலந்தாய்வும் இன்றே நடை பெறுகிறது.

இதில் கலந்துகொள்ளும் மாணவர்களுக்கு 22-ம் தேதி தற்காலிக ஒதுக்கீடும், அவர்கள் அதை உறுதி செய்த பிறகு, 23-ம் தேதி கல்லூரி ஒதுக்கீட்டு ஆணையும் வழங்கப்படும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x