

ஒன்று முதல் 8-ம் வகுப்பு வரை நேரடி வகுப்புகள் நவ.1-ம் தேதி தொடங்கப்படுவதாக அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக, தலைமைச் செயலர் வெ.இறையன்பு வெளியிட்ட அரசாணையில், ‘‘மருத்துவ நிபுணர்கள், கல்வியாளர்கள், பெற்றோர் தெரிவித்த ஆலோசனையின் பேரில் ஏற்கெனவே 9 முதல் 12-ம் வகுப்பு வரை இயங்க அனுமதிக்கப்பட்டுள்ளது.
இதே வகையிலும், மாணவர்களின் உளவியல் மற்றும் கல்வி நலனைக் கருத்தில்கொண்டும், கல்வி இடைவெளி காலத்தை குறைக்கும் பொருட்டும், நவ.1 முதல் அனைத்து பள்ளிகளிலும் ஒன்று முதல் 8 வரையிலான மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் செயல்பட அனுமதி அளிக்கப்படுகிறது.
அப்பள்ளிகளில் கரோனா தடுப்புவழிகாட்டு நெறிமுறைகள் பின்பற்றப்பட வேண்டியது அவசியம். இதற்குத்தேவையான தயாரிப்பு நடவடிக்கைகளை பள்ளிக்கல்வித் துறை மேற்கொள்ள வேண்டும்’’ என கூறப்பட்டுள் ளது.