

வகுப்புகள் தொடங்கியுள்ள நிலை யில், அரசுக் கல்லூரி விடுதிகளில் முதலாமாண்டு மாணவர்களை சேர்க்க நடவடிக்கை எடுக்க வேண் டும் என கோரிக்கை விடுக்கப் பட்டுள்ளது.
கரோனா பரவல் தடுப்பு நடவ டிக்கையாக கடந்தாண்டு மார்ச் மாதம் இறுதி வாரம் முதல் கல்வி நிலையங்கள் மூடப்பட்ட நிலையில், பின்னர் ஆன்-லைன் மூலமாகவே வகுப்புகள் நடத்தப்பட்டு வந்தன. தற்போது கரோனா பரவல் கட்டுக்குள் இருப்பதைத் தொடர்ந்து, செப்.1-ம் தேதி முதல் பள்ளிகளில் 9, 10, பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்புகளும், கல்லூரிகளில் 2, 3-ம் ஆண்டு வகுப்புகளும் நடத்தப்பட்டு வருகின்றன.
இந்தநிலையில், கடந்த அக்.4-ம் தேதி முதல் கல்லூரி முதலா மாண்டு வகுப்புகளும் தொடங்கி யுள்ள நிலையில், அரசு கல்லூரி களில் மாணவர்கள் வருகை குறைவாகவே இருப்பதாக கல்லூரி நிர்வாகங்கள் கூறுகின்றன.
இதுகுறித்து அரசுக் கல்லூரி பேராசிரியர்கள் கூறியது: திருச்சி மாவட்டத்தில் பிற்படுத்தப்பட் டோர்- சிறுபான்மை நலத் துறை சார்பில் 15 கல்லூரி விடுதிகளும், ஆதிதிராவிடர் நலத் துறை சார்பில் 6 கல்லூரி விடுதிகளும் செயல்பட்டு வருகின்றன. இதில், முதலாமாண்டு மாணவர்களுக்கு அரசுக் கல்லூரி விடுதிகளில் சேர்க்கை நடைபெறாததால், வெளியூர்களைச்சேர்ந்த ஏழை, எளிய, கிராமப்புற மாணவர்கள் கல்லூரிக்கு வருவதில் சிக்கல் உள்ளது.
இதேபோல, கடந்த கல்வி ஆண்டில் கல்லூரிகளில் முதலா மாண்டு சேர்ந்து, இந்த ஆண்டு 2-ம் ஆண்டு படிக்கும் மாணவர் களுக்கும் அரசு கல்லூரி விடுதி களில் சேர்க்கை நடைபெற வில்லை. இதனால், கல்லூரிகளில் மாணவர்கள் வருகை குறைந் துள்ளது. எனவே, இந்த விடுதி களில் முதலாமாண்டு மற்றும் 2-ம் ஆண்டு மாணவர்கள் சேர்க்கை நடத்த அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.
இதுகுறித்து மாவட்ட பிற்படுத் தப்பட்டோர்- சிறுபான்மையினர் நலத் துறை அலுவலர் கூறியது: அரசு மாணவர் விடுதிகளில் சமூக இடைவெளி உட்பட பல்வேறு கரோனா பரவல் தடுப்பு நடைமு றைகளைப் பின்பற்ற வேண்டிய அவசியம் உள்ளது. குறிப்பாக, கல்லூரி விடுதிகளில் 50 சதவீதம் மட்டுமே மாணவர்களை தங்க வைக்க வேண்டும் என்று அரசு அறிவுறுத்தியுள்ளது.
மேலும், மாவட்ட ஆட்சியர், சட்டப்பேரவை உறுப்பினர், கல்லூரி நிர்வாகத்தினர், சமூக ஆர்வலர், மாவட்ட பிற்படுத்தப்பட் டோர்- சிறுபான்மையினர் நல அலுவலர் ஆகியோர் அடங்கிய அரசுக் கல்லூரி விடுதி மாணவர் சேர்க்கைக்கான தேர்வுக் குழு விரைவில் மாற்றி அமைக்கப்பட வுள்ளது. இதுதொடர்பாக மாவட்ட ஆட்சியரின் கவனத்துக்கு கொண்டு சென்று விரைவில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றனர்.