

அரசுக் கல்லூரிகளில் முதுகலைக் கல்வியியல் படிப்பில் முதலாம் ஆண்டு சேர விரும்பும் மாணவர்கள் இன்று முதல் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்.
தமிழ்நாட்டில் 6 அரசு கல்வியியல் கல்லூரிகளும், 14 அரசு உதவிபெறும் கல்வியியல் கல்லூரிகளும், 600-க்கும் மேற்பட்ட தனியார் சுயநிதிக் கல்வியியல் கல்லூரிகளும் உள்ளன. இவற்றில் பி.எட். பட்டம் வழங்கப்படுகிறது. முன்பு ஓராண்டு காலமாக இருந்த பி.எட். படிப்பு, இரண்டு ஆண்டு காலமாக மாற்றப்பட்டது. அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்வியியல் கல்லூரிகளில் உள்ள இடங்கள் கலந்தாய்வு மூலம் ஒற்றைச் சாளர முறையில் நிரப்பப்படுகின்றன.
இந்நிலையில் எம்.எட். எனப்படும் முதுகலைக் கல்வியியல் படிப்பில் முதலாம் ஆண்டு சேர விரும்பும் மாணவர்கள், இன்று முதல் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம் என்று கல்லூரிக் கல்வி இயக்குநரகம் அறிவித்துள்ளது. விண்ணப்பக் கட்டணமாக ரூ.60 செலுத்த வேண்டும். எஸ்சி / எஸ்டி மாணவர்கள் ரூ.2 செலுத்தினால் போதும்
அதன்படி, தமிழ்நாடு முழுவதும் சென்னை, கோவை, புதுக்கோட்டை, ஒரத்தநாடு, வேலூர் உள்ளிட்ட இடங்களில் உள்ள 6 கல்லூரிகளில் விண்ணப்பிக்க விரும்பும் மாணவர்கள் www.tngasaedu.in என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம். இதற்கு விண்ணப்பிக்க அக்.13 கடைசித் தேதி ஆகும்.
மாணவர்கள் விண்ணப்பிக்க: https://www.tngasaedu.in/index.php என்ற இணையதள முகவரியை க்ளிக் செய்யவும்.
விண்ணப்பிக்க என்னனென்ன ஆவணங்கள் தேவை என்று காண: https://www.tngasaedu.in/pdf/TNGASA-Required-Documents.pdf