Published : 30 Sep 2021 07:44 AM
Last Updated : 30 Sep 2021 07:44 AM

முதுநிலை மருத்துவ படிப்புகளுக்கான நீட் தேர்வு முடிவுகள் வெளியீடு

சென்னை

முதுநிலை மருத்துவப் படிப்புகளுக்கான நீட் தேர்வு முடிவுகளை தேசிய தேர்வுகள் வாரியம் வெளி யிட்டுள்ளது.

இந்தியா முழுவதும் 2021-22-ம்கல்வி ஆண்டு மருத்துவப் பட்டமேற்படிப்பு மாணவர் சேர்க்கைக்கான நீட் தேர்வு தமிழகத்தில் சென்னை, கோவை, மதுரை, நெல்லை, சேலம், திருச்சி உட்படநாடு முழுவதும் 270 நகரங்களில் 679 மையங்களில் கடந்த 11-ம் தேதி ஆன்லைனில் நடைபெற்றது.

கட்-ஆஃப் மதிப்பெண்

இந்நிலையில் நீட் தேர்வு முடிவுகளை https://nbe.edu.in/, https://www.natboard.edu.in/ ஆகிய இணையதளங்களில் தேசிய தேர்வுகள் வாரியம் (என்டிஏ) நேற்று முன்தினம் இரவு வெளியிட்டது. 800 மதிபெண்களுக்கு நடைபெற்றநீட் தேர்வில் கட்-ஆஃப் மதிப்பெண்ணாக பொதுப் பிரிவினருக்கு (பொருளாதாரத்தில் நலிவடைந்த பொதுப் பிரிவினர் உட்பட) 302மதிப்பெண்ணும், ஓபிசி, எஸ்சி, எஸ்டி பிரிவினர்களுக்கு (மாற்றுத்திறனாளிகள் உட்பட) 265 மதிப்பெண்ணும், பொதுப் பிரிவு மாற்றுத்திறனாளிகளுக்கு 283 மதிப்பெண் ணும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இந்தியா முழுவதும் அரசு மருத்துவக் கல்லூரிகளின் மொத்த இடங்களில் 50 சதவீத இடங்கள் அகிலஇந்திய ஒதுக்கீட்டுக்கு ஒதுக்கப்படுகிறது. இந்த இடங்கள், நிகர்நிலை பல்கலைக்கழகங்களின் இடங்கள் மற்றும் மத்திய அரசின் கல்வி நிறுவனங்களின் இடங்களுக்கு மத்திய அரசின் சுகாதார சேவைகளுக்கான தலைமை இயக்கு நரகம் (டிஜிஎச்எஸ்) www.mcc.nic.in என்ற இணையதளத்தில் கலந்தாய்வை நடத்துகிறது.

அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு போக, மீதமுள்ள 50 சதவீதஇடங்கள், தனியார் மருத்துவக் கல்லூரிகளின் மாநில அரசுக்கான இடங்கள் மற்றும் நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களுக்கு மாநில அரசுகள் கலந்தாய்வு நடத்தவுள்ளது. இதே நடைமுறையை பின்பற்றி பல் மருத்துவப் பட்டமேற்படிப்பான எம்டிஎஸ் இடங்களுக்கும் கலந் தாய்வு நடைபெறுகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x