

ஐஐஎம் முதுகலை மேலாண்மைப் படிப்புகளில் சேர நடத்தப்படும் கேட் நுழைவுத் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசித் தேதி ஆகும்.
ஐஐஎம் உள்ளிட்ட தேசிய உயர் கல்வி நிறுவனங்களில் முதுகலை மேலாண்மைப் படிப்புகளில் சேர கேட் எனப்படும் பொது நுழைவுத் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும்.
கடந்த ஆண்டு ஐஐஎம் இந்தூர் நடத்திய கேட் தேர்வை சுமார் 2 லட்சம் மாணவர்கள் எழுதினர். தேர்வு 159 நகரங்களில் 430 தேர்வு மையங்களில் 3 ஷிஃப்டுகளில் நடைபெற்றது. கரோனா தொற்றுப் பரவலை முன்னிட்டு 96.15 சதவீதத் தேர்வர்களுக்கு அவர்கள் விரும்பிய தேர்வு மையங்களே ஒதுக்கப்பட்டன.
நடப்பு ஆண்டுக்கான கேட் தேர்வு, நாடு முழுவதும் நவம்பர் 28ஆம் தேதி நடைபெற உள்ளது.
முன்னதாக, ஆகஸ்ட் 4-ம் தேதி முதல் விண்ணப்பப் பதிவு தொடங்கி நடைபெற்றது வந்தது. இந்நிலையில் இந்தத் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசித் தேதி ஆகும். முன்பதிவு, விண்ணப்பத்தைப் பூர்த்தி செய்தல், சான்றிதழ் பதிவேற்றம், விண்ணப்பக் கட்டணம் செலுத்ததல் ஆகியவற்றை இன்று மேற்கொள்ளலாம்.
மாணவர்கள் அக்டோபர் 27-ம் தேதி முதல் அனுமதிச் சீட்டைப் பதிவிறக்கம் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டு தேர்வை ஐஐஎம் அகமாதாபாத் நடத்த உள்ளது குறிப்பிடத்தக்கது.