Published : 09 Sep 2021 03:13 AM
Last Updated : 09 Sep 2021 03:13 AM

‘இந்து தமிழ் திசை’, சோனா குரூப் ஆஃப் இன்ஸ்டிடியூஷன்ஸ் இணைந்து வழங்கும் ‘வாழ்வை உயர்த்தும் உயர்கல்வி’ - மாணவர்கள் தங்களுக்கு எது விருப்பமோ அந்த பாடப்பிரிவை தேர்ந்தெடுக்க வேண்டும்: இணையவழி வழிகாட்டுதல், ஆலோசனை நிகழ்ச்சியில் மூத்த கல்வியாளர்கள் அறிவுரை

மாணவர்கள் தங்களுக்கு எது விருப்பமோ அந்தப் பாடப்பிரிவை தேர்ந்தெடுத்து படிக்க வேண்டும் என்று ‘இந்து தமிழ் திசை’ நாளிதழ், சோனா குரூப் ஆஃப் இன்ஸ்டிடியூஷன்ஸ் இணைந்து நடத்திய ‘வாழ்வை உயர்த்தும் உயர்கல்வி’ நிகழ்ச்சியில் மாணவர்களுக்கு மூத்த கல்வியாளர்கள் அறிவுரை வழங்கினர்.

10-ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 படித்துவிட்டு, அடுத்து என்ன படிப்பது, எந்த படிப்புக்கு வேலைவாய்ப்பு அதிகம் என்பது உள்ளிட்ட மாணவர்கள், பெற்றோர்களுக்கு எழும் பல்வேறு சந்தேகங்களுக்கு ஆலோசனைகள், வழிகாட்டுதலை வழங்கும் வகையில் ‘இந்து தமிழ்திசை’, சோனா குரூப் ஆஃப் இன்ஸ்டிடியூஷன்ஸ் இணைந்து ‘வாழ்வை உயர்த்தும் உயர்கல்வி’ எனும் இணையவழி ஆலோசனை நிகழ்வை நேற்று நடத் தின. இந்த நிகழ்வில் மூத்த கல்வியாளர்கள் கலந்துகொண்டு உரையாற்றிய தாவது:

சேலம் பெரியார் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் டாக்டர் பி.குழந்தைவேல்: பள்ளிக்கல்வியில் பொதுவான பாடங்கள் மட்டுமே மாணவர்களுக்கு கற்றுத் தரப்படும். ஆனால், உயர்கல்வி என்பது கலை, அறிவியல், தொழில்நுட்பம் என பல்வேறு நிலை
கள் விரிவாக இருக்கும். மேலும், வேலைவாய்ப்புகள் பெறுவதைக் கருத்தில்கொண்டு மட்டும் மாணவர்கள் உயர்கல்வி படிப்புகளைத் தேர்வு செய்வது சரியானதாக இருக்காது. அடுத்த 50 ஆண்டில் தொழில்நுட்பம் மிகப்பெரிய அளவில் வளர்ச்சி அடைந்திருக்கும். அதனுடன் இணைந்து பயணிக்கும் வகையில் தயாராக வேண்டும். உயர்கல்வி என்பது மாணவர்களின் விருப்பத்தைப் பொறுத்தே தேர்வு செய்யப்பட வேண்டும். அதனுடன் கணினிஅறிவு, ஆங்கிலப் புலமை, கணித அறிவையும் ஒருசேர கற்றுக் கொண்டால், நிச்சயம் நல்ல வேலைவாய்ப்பை பெறமுடியும்.

சேலம் தியாகராஜர் பாலிடெக்னிக் கல்லூரி முதல்வர் டாக்டர் வி.கார்த்தி கேயன்: ஒரு நாட்டில் சமுதாயம் மற்றும் பொருளாதாரம் ஆகியவற்றில் உயர்கல்வியால் மட்டுமே வளர்ச்சியைஏற்படுத்த முடியும். நம் நாட்டில் 9,700 கல்வி நிறுவனங்கள் செயல்படுகின்
றன. அதில் 4,100 இளநிலை பட்டப்படிப்புகளும், 4,951 முதுநிலை படிப்புகளும், 4,514 டிப்ளமோ படிப்புகளும் உள்ளன. மாணவர்கள் தங்கள் ஆர்வத்துக்குஏற்ற படிப்புகளைத் தேர்வு செய்து படிக்கவேண்டும். தற்போது கணினிசேவையில்தான் 80 சதவீத வேலை
வாய்ப்பு உள்ளது. அதற்கு அடுத்தபடியாக ஆலோசனை சேவைகள் (38%),உற்பத்தி பிரிவு (18%) என உள்ளது. டிப்ளமோ படிப்புகளுக்கான தேவையும்தற்போது அதிகரித்து வருகிறது. அதேபோல், ஒரே நேரத்தில் பல்வேறு கல்லூரிகளில் பயிலும் திட்டம் உள்ளிட்ட பல திட்டங்களுக்கு ஏஐசிடிஇ அனுமதி வழங்கியுள்ளது. இதன்மூலம், இளநிலையில் ஒரு பாடப்பிரிவில் படித்த மாணவர், முதுநிலையில் வேறு பாடத்தைப் படிக்க முடியும். இதுபோல், பல்வேறு வாய்ப்புகள் உயர்கல்வியில் உள்ளன. அவற்றை மாணவர்கள் முறையாகபயன்படுத்திக்கொள்ள வேண்டும்.

சேலம் சோனா காலேஜ் ஆஃப் டெக்னாலஜி முதல்வர் டாக்டர் எஸ்.ஆர்.ஆர்.செந்தில்குமார்: உயர்கல்வி படிப்புகளைத் தேர்வு செய்யும்போது பிள்ளைகளின் விருப்பத்துக்கு பெற்றோர்கள் முக்கியத்துவம் அளிக்க வேண்டும். அதன்பிறகு எந்தக் கல்லூரி
என்பதை தேர்வுசெய்ய வேண்டும். உயர்கல்வியே அடுத்த 50 ஆண்டுகள் மாணவர்களின் வாழ்க்கையை தீர்மானிக்கக் கூடியது. அதற்காக பல கல்வியாளர்கள், அறிஞர்களிடம் ஆலோசனை கேட்பது தவறில்லை. அதேநேரத்தில் மாணவர்கள் மதிப்பெண்களை மட்டுமே குறிவைத்து படிக்கக்கூடாது. திறன் வளர்ப்பிலும் கவனம் செலுத்த வேண்டும். விடாமுயற்சியுடன் போராடினால் உங்கள் வெற்றியை யாராலும் தடுக்க முடியாது.

சோனா கலை அறிவியல் கல்லூரிமுதல்வர் டாக்டர் ஜி.எம்.காதர் நவாஸ்: படிப்புகளுக்கு ஏற்ற வேலைகள் கிடைப்பதில்லை என்பது தவறானது. பெரும்பாலான மாணவர்கள் பிரபலமான பாடப்பிரிவுகளைத் தேர்வு செய்கின்றனர். அதனால் அவற்றையே நீங்களும் தேர்வுசெய்ய வேண்டும் என்று அவசியமில்லை. தகுதியான இதர பாடங்களையும் மாணவர்கள் தேர்வுசெய்து படிக்க முன்வர வேண்டும். கல்வியோடுதனி நபர் திறமையை வளர்த்துக்கொண்டால் அதிக சம்பளத்துடன் நல்ல வேலைக்குச் செல்ல முடியும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

அதைத் தொடர்ந்து மாணவர்கள், பெற்றோர்களின் கேள்விகளுக்கு கல்வியாளர்கள் விளக்கம் அளித்தனர். இந்தஆன்லைன் வழிகாட்டி நிகழ்ச்சியை ‘இந்து தமிழ் திசை’ நாளிதழின் முதுநிலை உதவி ஆசிரியர் மு.முருகேசன் நெறிப்படுத்தினார். இந்த நிகழ்வில் பங்கேற்க தவறியவர்கள் https://www.youtube.com/watch?v=e7ZgJ3IT7xk&ab என்ற லிங்க்கில் முழு நிகழ்வையும் பார்க்கலாம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x