

தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகத்தில் 2021- 2022ஆம் கல்வியாண்டிற்கான பிஎச்.டி., எம்.ஃபில் படிப்புகளுக்கு மாணவர் சேர்க்கை தொடங்கி நடைபெற்று வருகிறது.
ஆசிரியர் கல்வியை மேம்படுத்தி, தரமான ஆசிரியர்களை உருவாக்கும் நோக்கத்தில் 2008-ம் ஆண்டு தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகம் தொடங்கப்பட்டது.
தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகத்தின் கீழ், தமிழகத்தில் 7 அரசு கல்வியியல் கல்லூரிகள், 14 அரசு உதவி பெறும் கல்வியியல் கல்லூரிகள் மற்றும் சுமார் 700 தனியார் கல்வியியல் கல்லூரிகள் செயல்பட்டு வருகின்றன. இக்கல்லூரிகளில் பி.எட், எம்.எட். படிப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன.
இந்நிலையில் தற்போது தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகத்தில் 2021- 2022ஆம் கல்வியாண்டிற்கான பிஎச்.டி., எம்.ஃபில். படிப்புகளுக்கு மாணவர் சேர்க்கை தொடங்கி நடைபெற்று வருகிறது. இதற்கு விண்ணப்பிக்க செப்டம்பர் 15 கடைசித் தேதி ஆகும்.
முழு நேர மற்றும் பகுதி நேர எம்.ஃபில். படிப்புகளுக்கு விண்ணப்பிக்க: https://www.tnteu.ac.in/admin/file_storage/cms/M.Phil%20Application%202021%20modified.pdf.pdf
கூடுதல் விவரங்களுக்கு: 99766 32971/ 97870 69573/ 75502 72611
முழுநேர மற்றும் பகுதி நேர பிஎச்.டி. படிப்புகளுக்கு விண்ணப்பிக்க:
https://www.tnteu.ac.in/admin/file_storage/cms/Ph.D%20Application%202021-1%20modified.pdf.pdf
கூடுதல் விவரங்களுக்கு: 99766 32971/ 97870 69573/ 75502 72611
மாணவர்கள் பூா்த்தி செய்த விண்ணப்பத்தை உரிய சான்றிதழ்களுடன், 'பதிவாளர், தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகம், கங்கை அம்மன் கோயில் தெரு, காரப்பாக்கம், சென்னை 600 097' என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.