Published : 14 Aug 2021 03:17 AM
Last Updated : 14 Aug 2021 03:17 AM

‘இந்து தமிழ் திசை’, அம்ரிதா விஷ்வ வித்யாபீடம் உடன் இணைந்து வழங்கும் ‘உயர்வுக்கு உயர்கல்வி’- எவர்கிரீன் துறையாக என்றைக்கும் சிறந்து விளங்குகிறது ஃபேஷன் டெக்னாலஜி: ஆன்லைன் வழிகாட்டி நிகழ்ச்சியில் துறை வல்லுநர்கள் தகவல்

சென்னை

என்றைக்கும் எவர்கிரீன் துறையாக ஃபேஷன் டெக்னாலஜி துறை விளங்குகிறது என்று ‘இந்து தமிழ் திசை’ நாளிதழ், அம்ரிதா விஷ்வ வித்யாபீடம் இணைந்து நடத்தும் ‘உயர்வுக்கு உயர்கல்வி’ ஆன்லைன் வழிகாட்டி நிகழ்ச்சியில் வல்லுநர்கள் தெரிவித்தனர்.

பிளஸ் 2 முடித்துள்ள மாணவர்கள் பயன்பெறும் வகையில் ‘இந்து தமிழ் திசை’ நாளிதழும், அம்ரிதா விஷ்வ வித்யாபீடமும் இணைந்து ‘உயர்வுக்கு உயர்கல்வி’ என்றதொடர் நிகழ்ச்சியை ஆன்லைனில்நடத்துகின்றன. கடந்த 12-ம் தேதிநடந்த 15-வது நிகழ்வில் ‘ஃபேஷன்டிசைன்’ எனும் தலைப்பில் இத்துறை வல்லுநர்கள் உரையாற்றியதாவது:

ராஜஸ்தான் ஜோத்பூர் இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆஃப் ஹேண்ட்லூம் டெக்னாலஜி இயக்குநர் டாக்டர் கே.ஜெ.சிவஞானம்: பிளஸ் 2 முடித்த மாணவர்களுக்கு பயனளிக்கும் நிகழ்வை ஏற்பாடு செய்துள்ள ‘இந்து தமிழ் திசை’ நாளிதழுக்கு முதலில் என் நன்றி. பிளஸ் 2 முடித்த மாணவர்கள் அடுத்து நீங்கள் தேர்வு செய்யப்போகும் எந்தபடிப்பானாலும் கவனமாகத் திட்டமிட்டு தேர்வுசெய்ய வேண்டும்.

ஒரு மனிதன் உயிர் வாழ அடிப்படைத் தேவை உணவு, உடை,இருப்பிடமாகும். தற்போதுள்ள சூழலில் உணவு இரண்டாமிடத்துக்கும், உடை முதலிடத்துக்கும் செல்கிறது. இந்தத் துறை எவர்கிரீன் துறையாக, நம்பிக்கைக்குரிய துறையாக விளங்குகிறது. விவசாயத்துக்கு அடுத்ததாக அதிக வேலை வாய்ப்பு, ஃபேஷன் டெக்னாலஜி துறையில்தான் உள்ளது. இந்தியஅளவில் 35 முதல் 40 மில்லியன்மக்களுக்கு நேரடியான வேலைவாய்ப்பை இத்துறை வழங்குகிறது.

சென்னை என்ஐஎஃப்டி பேராசிரியர் டாக்டர் எம்.வசந்தா: ஃபேஷன்டிசைன் படித்தால் நம் குழந்தைகள் ஃபேஷன் ஷோ மாடல்களாகி விடுவார்கள் என்கிற எண்ணம் பெற்றோர் மத்தியில் உள்ளது. ஃபேஷன்என்பது நாம் அணியும் ஆடைகள் மட்டுமல்ல; காலில் போடும் செருப்பு, பயன்படுத்தும் செல்போன், வாட்ஸ்-அப்பில் இருக்கிறோமா, டெலிகிராமில் இருக்கிறோமா, என்ன பேசுகிறோம் என்பதுஉள்ளிட்ட பலவும் ஃபேஷன் ஆகும். கடந்த 5 ஆயிரம் ஆண்டுகளாக இந்தியா, உலகுக்கு அளித்த பெருங்கொடை காட்டன் ஆகும். காட்டன் உற்பத்தியில் இந்தியா 3-வது இடத்திலும், பட்டுத் துணிகள் உற்பத்தியில் 2-ம் இடத்திலும்இருக்கிறது. லெதர் பொருட்களைக்கொண்டும் இன்றைக்கு விதவிதமான ஆடைகள் உள்ளிட்டபொருட்கள் தயாரிக்கப்படுகின்றன. இந்தத் துறையானது டிசைன், மேனேஜ்மென்ட், டெக்னாலஜி அண்ட் கம்யூனிகேஷன் எனும் 4 முக்கிய பிரிவுகளைக் கொண்டது. இந்தத் துறைக்கான தேவை நாளுக்கு நாள் அதிகரித்து வருமேயொழிய ஒருபோதும் குறையாது.

மெட்ராஸ் இன்ஸ்டிடியூட் ஆஃப் ஃபேஷன் டெக்னாலஜி கருத்தாளர் பி.கே.பூங்குழலி: ஃபேஷன் என்றதுமே துணி தைக்கும் டெய்லர் என்றுநினைக்கிறோம். உண்மையில் நாம் பயன்படுத்தும் அனைத்துபொருட்களையும் வடிவமைப்பவர்கள் ஃபேஷன் டிசைனர்களே. ஒருஆடையின் வண்ணம், அந்த ஆடைநெய்யப்பட்டுள்ள துணியின் தன்மை, அதில் பயன்படுத்தும் பட்டன், அதில் எம்ப்ராய்டரி வேலைஇருக்கிறதா என ஒவ்வொன்றையும் கவனித்துச் செய்வதே ஃபேஷனாகும். இந்த படிப்பில் பிரின்ஸிபல் ஆஃப் டிசைன், கலர் தியரி, டிசைன்புராசஸ் ஆகியன டிசைன் பிரிவில் சொல்லித் தரப்படுகிறது.

ஃபேஷன் டிசைனை எப்படி வடிவமைப்பது, அதற்கு தேவையானபொருட்களை எப்படி பயன்படுத்துவது? உள்ளிட்டவைகளும் கற்றுத் தரப்படும். இண்டஸ்ட்ரியல் புராசஸில் ஸ்பின்னிங், வீவிங், தைத்தல், வண்ணம் கொடுத்தல், கார்மன்ட் உற்பத்தி செய்தல் ஆகியன பற்றியும் சொல்லித் தரப்படுகிறது.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

பின்னர், ஃபேஷன் டெக்னாலஜிபடிப்பு, வேலைவாய்ப்புகள் பற்றிய மாணவர்களின் கேள்விகளுக்கு துறை வல்லுநர்கள் விளக்கம் அளித்தனர். இந்த ஆன்லைன் நிகழ்ச்சியை ‘இந்து தமிழ் திசை’ நாளிதழின் முதுநிலை துணை ஆசிரியர் ம.சுசித்ரா நெறிப்படுத்தினார்.

இந்த நிகழ்ச்சியை சவீதா இன்ஜினீயரிங் காலேஜ், சென்னை இன்ஸ்டிடியூட் ஆஃப் டெக்னாலஜி, ஸ்ரீஈஸ்வர் காலேஜ் ஆஃப் இன்ஜினீயரிங், சிவகாசி ஸ்ரீ காளீஸ்வரி காலேஜ், வேல்ஸ் இன்ஸ்டிடியூட் ஆஃப் சயின்ஸ் அண்ட் டெக்னாலஜி ஆகியவை இணைந்து வழங்கின. இந்தநிகழ்வில் பங்கேற்கத் தவறியவர்கள் https://www.youtube.com/user/tamithehindu/videos என்ற லிங்க் மூலம் முழு நிகழ்வையும் பார்க்கலாம்.

இந் நிகழ்ச்சியில் பங்கேற்க விரும்புவோர் https://bit.ly/3wxsbK6 என்ற லிங்க்கில் பதிவுசெய்து கொள்ளவும்.

இன்று (சனி) மாலை 4.30 மணிக்கு நடைபெறும் நிகழ்ச்சியில், சிவில்

Sign up to receive our newsletter in your inbox every day!

 
x