

இணைய வழியில் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் அவரவர்களின் வீடுகளில் இருந்தே கொடைக்கானல் சூரிய ஆராய்ச்சிக் கூடத்தைக் காணலாம். இதில் பங்கேற்கும் அனைவருக்கும் சான்றிதழ் வழங்கப்படும்.
உடுமலை கலிலியோ அறிவியல் கழகம் மற்றும் அறிவியல்சார் சிந்தனையைத் தாய்மொழியில் பரப்புவதை நோக்கமாகக் கொண்டு ஆரம்பிக்கப்பட்ட தன்னார்வ நிறுவனமான டி.ஒய்.ஏ.யு (DYAU) இணைந்து பள்ளி மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு இணையவழிக் கருத்தரங்கு மற்றும் இணையவழியில் ஆராய்ச்சிக் கூடத்தைப் பார்வையிடும் நிகழ்வை நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது.
இந்திய வானியற்பியல் நிறுவனத்தின் கீழ் இயங்கும் கொடைக்கானல் சூரிய ஆராய்ச்சிக் கூடத்தில் விஞ்ஞானியாக ஆராய்ச்சிகளை மேற்கொண்டு வருபவர் முனைவர்.எபினேசர் செல்லசாமி எட்வின். அவர் சூரிய ஆராய்ச்சிக் கூடத்தில் செய்து வரும் ஆராய்ச்சிகள் பற்றியும், கடந்த காலத்தில் எவ்வாறு சூரியனைப் பற்றிய ஆராய்ச்சிகளை இந்த ஆய்வுக் கூடத்தில் செய்து வந்தனர் என்பது பற்றியும், தற்போது ஏற்பட்டுள்ள தொழில்நுட்ப வளர்ச்சிகள் குறித்தும் விளக்க உள்ளார்.
இந்த நிகழ்ச்சி ஆகஸ்ட் 8-ம் தேதிஅன்று காலை 11 மணி முதல் 1 மணி வரை நடைபெற உள்ளது. அதைத் தொடர்ந்து மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களின் கேள்விகளுக்குப் பதில் அளிக்க உள்ளார். அதன் தொடர்ச்சியாக சூரிய ஆராய்ச்சிக் கூடத்தின் பல்வேறு தொலைநோக்கிகளை இணையவழியில் அவரவர் வீடுகளில் இருந்தே பார்க்கும் நிகழ்ச்சியும் திட்டமிடப்பட்டுள்ளது.
கலந்துகொள்ளும் அனைவருக்கும் சான்றிதழ்கள் வழங்கப்படும். மேலும் ஒரு நாள் அறிவியல் சுற்றுலாவாகக் கொடைக்கானல் சூரிய ஆராய்ச்சிக் கூடத்தைப் பார்வையிடும் வாய்ப்பும் கிடைக்கும்.
இந்த இணையவழி நிகழ்வில் கலந்துகொள்ள விருப்பம் உள்ளவர்கள் https://forms.gle/Qs75hQGVP3riznZS6 என்ற இணைப்பின் மூலம் பதிவு செய்துகொள்ளலாம்.
பதிவு செய்யக் கடைசித் தேதி: 07-08-2021
கூடுதல் தகவல்களுக்கு: 8778201926, galilioscienceclub@gmail.com