

புதுச்சேரியில் ஆதிதிராவிட, பழங்குடியின மாணவ, மாணவி களுக்கு நடப்பாண்டு முதல் இலவசக் கல்வி திட்டம் அமலாகிறது.
புதுவையில் கடந்த காங்கிரஸ் ஆட்சியின் போது ஆதிதிராவிடர், பழங்குடியின மாணவர்களுக்கு ஆரம்பக் கல்வி முதல் ஆராய்ச்சிக் கல்வி வரை கட்டணமின்றி இலவசக் கல்வி வழங்கும் திட்டத்தை சட்டப்பேரவையில் அறிமுகப்படுத்தியது. ஆனால், இத்திட்டம் நடைமுறைக்கு வரவில்லை.
நடப்பு கல்வியாண்டில் இத்திட் டத்தை நிறைவேற்ற வேண்டும் என அரசியல் கட்சிகள், சமூக அமைப்புகள் வலியுறுத்தி வந்தன. இந்நிலையில் நடப்பு கல்வி யாண்டு முதல் இத்திட்டத்தை நடைமுறைப்படுத்த புதுவை அரசு முடிவு செய்துள்ளது. இதற்காக ஆதிதிராவிடர், பழங்குடியின மாணவர்களின் விவரங்களை அத்துறை சேகரித்து வருகிறது. பல தனியார் பள்ளி, கல்லூரிகள் இந்த விவரங்களை அத்துறைக்கு தரவில்லை.
இந்நிலையில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை இயக்குநர் யஷ்வந்தையா பிறப்பித்துள்ள உத்தரவு விவரம் வருமாறு:
புதுவையில் கல்வி பயிலும் அனைத்து ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியின மாணவ, மாணவிகளுக்கு முழுக் கல்வி கட்டணத்தையும் அரசே செலுத்தும் திட்டம் 2020-21ம் கல்வியாண்டில் இருந்து செயல்படுத்தப்படுகிறது.
இத்திட்டத்துக்கான மாணவர் விவரங்கள் கோரிய கடித வழி அறிவுறுத்தல் துறையின் மூலம் ஜனவரி 12, பிப்ரவரி 16, மற்றும் கடந்த 1-ம் தேதி ஆகிய நாட்களில் அனைத்து கல்வி நிலையங்கள், சம்பந்தப்பட்ட அரசு துறைகளுக்கு அனுப்பப்பட்டுள்ளது. இருப்பி னும் பல கல்வி நிறுவனங்கள் இதுவரை விவரங்களை அளிக்க வில்லை.
கல்வி நிறுவனங்கள் தங்க ளிடம் பயிலும் தகுதியுடைய மாணவர்களின் விவரங்களை 15 நாட்களில் சமர்பிக்க வேண்டும். கல்வி நிறுவனங்கள் தங்களிடம் படிக்கும் தகுதியுடைய மாணவர்களிடம் கட்டணத்தை செலுத்தக்கோரி வற்புறுத்த கூடாது என அறிவுறுத்தப்படுகின்றனர். தவறும்பட்சத்தில் சம்பந்தப்பட்ட கல்வி நிறுவனங்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று குறிப்பிட்டுள்ளார்.
"தகுதியுடைய அனைத்து மாணவர்களும் தாங்கள் படிக்கும் கல்வி நிறுவனங்களை அணுகி,தங்கள் விவரங்களை துறைக்குஅளித்துள்ளார்களா என்று விசாரித்து, தராமல் இருந்தால் உடன் தர அறிவுறுத்தலாம்" என்றும் புதுவை ஆதிதிராவிட நலத்துறையினர் குறிப்பிடுகின்றனர்.