கலை, அறிவியல் கல்லூரிகளில் இறுதியாண்டுக்கு மட்டுமே ஆன்லைனில் தேர்வு: புதுச்சேரி மத்திய பல்கலைக்கழகம் அறிவிப்பு

கலை, அறிவியல் கல்லூரிகளில் இறுதியாண்டுக்கு மட்டுமே ஆன்லைனில் தேர்வு: புதுச்சேரி மத்திய பல்கலைக்கழகம் அறிவிப்பு
Updated on
1 min read

கலை, அறிவியல் கல்லூரிகளில் இறுதியாண்டுக்கு மட்டுமே ஆன்லைனில் செமஸ்டர் தேர்வுகள் நடத்தப்படும். பட்டப்படிப்பு, பட்டமேற்படிப்பில் இதர ஆண்டுகளுக்கு செமஸ்டர் தேர்வில்லை. அகமதிப் பீட்டு முறையில் மதிப்பெண்கள் தரப்படும் என்று புதுச்சேரி மத்திய பல்கலைக்கழகம் தெரிவித் துள்ளது.

புதுச்சேரியில் கல்லூரி தேர்வு கள் தொடர்பாக தெளிவான நடைமுறை வெளியிடப்படாமல் இருந்தது. இதைத்தொடர்ந்து மாணவர்கள் போராட்டத்தில் ஈடு பட்டு வந்தனர். இந்நிலையில் ஆன்லைனில் தேர்வு நடத்துமாறு பல்கலைக்கழகத்துக்கு கல்விய மைச்சர் நமச்சிவாயம் கடிதம் எழுதினார். இதையடுத்து கடந்த 19-ம் தேதி முதல் அனைத்து தியரி தேர்வுகளும் ஆன்லைன் முறை மூலம் நடத்தப்படும் என்றுபல்கலைக்கழகம் தெரிவித்திருந் தது. அதன்படி இறுதியாண்டு தேர்வுகள் பலதுறைகளில் தொடங்கியது.

கல்லூரி முதல்வர்கள் வினாத்தாள்களை மின்னஞ்சல் மூலம் அனுப்புவார்கள். மாண வர்கள் ஏ4 அளவு வெள்ளை காகிதத்தில் கருப்பு மை கொண்டு எழுதலாம். 3 மணி நேர காலத்திற்குப் பிறகு மாணவர்கள் எழுதிய விடைத்தாளை ஸ்கேன் செய்து கல்லூரி முதல்வருக்கு 30 நிமிடங்களுக்குள் அனுப்பலாம்.

கல்லூரி முதல்வர்கள் விடைத்தாள்களை நகலெடுத்து முதல் பக்கத்தில் கல்லூரி முத்திரையை இட்டு அதே நாளில் பல்கலைக்கழகத்துக்கு விடைத்தாளை அனுப்பி வருகின்றனர்.

இந்நிலையில் நேற்று பல்கலைக்கழக தேர்வுக் கட்டுப்பாட்டாளர் லாசர், அனைத்துக் கல்லூரிக ளுக்கும் அனுப்பியுள்ள உத்தர வில், “இறுதியாண்டு மாணவ, மாணவிகளுக்கான செமஸ்டர் தேர்வுகள் ஆன்லைனில் நடத்தப்படும். பட்டப்படிப்பில் முதலா மாண்டு, இரண்டாமாண்டு மற்றும் பட்டமேற்படிப்பில் முதலாமாண்டு செமஸ்டர் வரும் ஜூலை 27 முதல் நடத்த திட்டமிடப்பட்டிருந்தன. அவர்களுக்கான செமஸ்டர்தேர்வுகள் ரத்து செய்யப்படுகின் றன. அவை அகமதிப்பீட்டு முறையில் மதிப்பெண்கள் மதிப்பீடு செய்யப்படும். அதேநேரத்தில் இம்மாண வர்கள் தேர்வுகளுக்கு பதிவு செய்ய வேண்டும். அதேபோல் தேர்வுக் கட்டணம் உட்பட அனைத்து விஷயங்களையும் ஏற்கெனவே தரப்பட்டுள்ள அட்டவணைப்படி பின்பற்ற வேண்டும்” என்று குறிப் பிட்டுள்ளார்.

இதுதொடர்பாக பல்கலைக் கழகத்தரப்பில் விசாரித்தபோது, “இவ்வுத்தரவானது முழுக்க கலை, அறிவியல் கல்லூரிகளுக்கு மட்டுமே பொருந்தும். பொறியியல், மருத்துவப் படிப்புகளுக்கு பெருந்தாது. யூஜிசி வழிகாட்டுதல் அடிப்படையில் இவ்வுத்தரவு நடைமுறைப்படுத்தப்படுகிறது” என்று குறிப்பிட்டனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in