

‘இந்து தமிழ் திசை’ நாளிதழ், ‘சங்கர் ஐஏஎஸ் அகாடமி’ வழங்கும் ‘ஆளப் பிறந்தோம்’ எனும் வழிகாட்டு நிகழ்ச்சி, வரும் ஞாயிறன்று (ஜூலை 25) காலை 10.30 மணிக்கு ஆன்லைனில் நடைபெற உள்ளது.
யுபிஎஸ்சி, டிஎன்பிஎஸ்சி தேர்வுக்கான அடிப்படை கல்வித் தகுதி,எத்தனை ஆண்டுகள் படிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கேள்விகளுடன் தயங்கி நிற்போரின் தயக்கத்தைப் போக்கி தெளிவு தரும் வகையில், ‘ஆளப் பிறந்தோம்’ என்ற நிகழ்ச்சி நடத்தப்பட உள்ளது.
மாணவர்களும் பங்கேற்கலாம்
கரோனா பரவல் காரணமாக வீடுகளிலேயே தனித்திருக்கும் பள்ளி, கல்லூரி மாணவ - மாணவிகளும், யுபிஎஸ்சி, டிஎன்பிஎஸ்சிதேர்வுக்குத் தயாராவோரும் இந்நிகழ்வில் கலந்துகொள்ளலாம்.
இந்த நிகழ்ச்சியில் மகாராஷ்டிரா மாநிலத்தின் அமராவதி (ஊரகம்) மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் என்.ஹரி பாலாஜி, ஐபிஎஸ்., திருநெல்வேலி மாவட்டம், சேரன்மகாதேவி சார் ஆட்சியர்வி.சிவகிருஷ்ணமூர்த்தி ஐஏஎஸ்., சங்கர் ஐஏஎஸ் அகாடமியின் இயக்குநர் டாக்டர் எஸ்.டி.வைஷ்ணவி ஆகியோர் கலந்துகொண்டு கருத்துரையாற்ற இருக்கிறார்கள். ஞாயிறு காலை 10.30 மணிக்குத்தொடங்கும் இந்த நிகழ்ச்சி மதியம் 1 மணி வரை நடைபெறும்.
இதில் பங்கேற்க விரும்புவோர் http://bit.ly/3pVDpGj என்ற லிங்க்கில் பதிவுசெய்து கொள்ளலாம்.