Published : 05 Jul 2021 03:12 AM
Last Updated : 05 Jul 2021 03:12 AM

‘இந்து தமிழ் திசை’ இணைந்து வழங்கும் ‘உயர்வுக்கு உயர்கல்வி’ வழிகாட்டி நிகழ்ச்சி ஜூலை 10-ல் தொடக்கம்; மாணவர்கள் வாழ்க்கையை புத்திசாலித்தனமாக திட்டமிடுதல் அவசியம்: அம்ரிதா விஷ்வ வித்யாபீடத்தின் பி.டெக். சேர்க்கை தலைவர் மகேஷ்வர சைதன்யா ஆலோசனை

மாணவர்கள் தங்கள் வாழ்க்கையை புத்திசாலித்தனமாக திட்டமிடுதல் அவசியம் என்று அம்ரிதா விஷ்வ வித்யாபீடத்தின் பி.டெக். சேர்க்கை தலைவர் மகேஷ்வர சைதன்யா ஆலோசனை கூறினார்.

பிளஸ் 2 முடித்த பிறகு, எங்கு, என்ன படிப்பது என்ற கேள்விகளோடு நிற்கும் மாணவர்களுக்கு வழிகாட்டும் வகையில் ‘உயர்வுக்கு உயர்கல்வி’ எனும் வழிகாட்டி நிகழ்ச்சியை ‘இந்து தமிழ் திசை’ நாளிதழ் பல ஆண்டுகளாக நடத்தி வருகிறது. கரோனா பரவல் காரணமாக வீடுகளிலேயே இருக்கும் மாணவர்களுக்கு பயனளிக்கும் வகையில் கடந்த 2 ஆண்டுகளாக அம்ரிதா விஷ்வ வித்யாபீடம் உடன் இணைந்து இணைய வழியில் வழிகாட்டி நிகழ்ச்சியை நடத்தி வருகிறது.

இந்நிலையில், வரும் 10-ம் தேதி முதல் நடைபெற உள்ள இந்த இணைய வழியேயான வழிகாட்டு நிகழ்ச்சி குறித்து அம்ரிதா விஷ்வ வித்யாபீடத்தின் பி.டெக். சேர்க்கை தலைவர் மகேஷ்வர சைதன்யா கூறியதாவது:

கரோனா தொற்றின் தாக்கத்தால் இன்றுஉலகமே கடினமான சூழலை எதிர்கொண்டிருக்கிறது. ஓராண்டு காலமாக தொடர்ச்சியான ஊரடங்கு காரணமாக பள்ளி, கல்லூரிகள் இன்னமும் திறக்கப்படாமல் உள்ளன. இந்த சூழலில், பிளஸ் 2 முடித்துவிட்டு, அடுத்து என்ன படிக்கலாம், எங்கே படிக்கலாம், எந்தக் கல்லூரியில் படித்தால் உடனடியாக வேலை கிடைக்கும், என்ன படிப்பு படித்தால் அதிக ஊதியம் கிடைக்கும் வேலையில் சேரலாம் என்று பல கேள்விகள் மாணவர்கள், பெற்றோர் மத்தியில் உள்ளன.

இத்தகைய கேள்விகளுக்கு பதில்களை வழங்கும் வகையில், புகழ்மிக்க கல்வியாளர்கள், கல்வி ஆளுமைகள் பங்கேற்கும் ஆன்லைன் வழியிலான ஆலோசனை மற்றும் வழிகாட்டும் நிகழ்ச்சியை ‘இந்து தமிழ் திசை’ நாளிதழோடு இணைந்து, அம்ரிதா விஷ்வ வித்யாபீடம் நடத்துகிறது.

எதிர்கால பிரச்சினைகளைத் தீர்க்கும் சமுதாயமாக இன்றைய இளைய தலைமுறை இருக்கும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. நாளைய அனைத்து தொழில்களும் தொழில்நுட்பம் சார்ந்ததாகவே இருக்கும். எனவே, எந்தவொரு பள்ளி மாணவருக்கும் சிக்கல் தீர்க்கும் திறமையும், தொடர்பு திறனும் தவிர்க்க முடியாத ஒன்றாக இருக்கின்றன. மாணவர்கள் தங்கள் வாழ்க்கையை புத்திசாலித்தனமாக திட்டமிடுதல் வேண்டும். அதற்குஒவ்வொரு மாணவரும் இணையத்தில் நன்றாக ஆராய்ச்சி செய்ய வேண்டும். தன் சொந்த வலிமையை நன்றாக புரிந்துகொள்ள வேண்டும். குறைந்தபட்சம் 3 தொழில் விருப்பங்களைக் கொண்டிருக்க வேண்டும். கல்லூரியைத் தேர்ந்தெடுப்பது எப்போதும் இரண்டாம் நிலை. நல்ல வேலைவாய்ப்பு மற்றும் முன்னணி தொழில் துறை அனுபவம் உள்ள ஆசிரியர்களைக் கொண்ட கல்லூரியைத் தேடுங்கள். பந்தயத்தில் முதலிடம் பெற எப்போதும் முயற்சியில் ஈடுபட வேண்டும். நினைவில் கொள்ளுங்கள். தேர்வில் மதிப்பெண் பெறுவது மட்டும் முக்கியமில்லை; நல்ல திறன்களும், ஒழுக்கமான வாழ்வும்தான் உயிர்வாழ முக்கியம்.

அம்ரிதா கல்வி நிறுவனங்களில், ‘வாழ்க்கைக்கான கல்வியையும், முறையான வாழ்வுக்கான கல்வியையும்’ பயிற்றுவிக்கிறோம். அம்ரிதாவில் இருந்து வெளியேறும் மாணவர்கள் சமுதாயத்துக்கான சிக்கல்களைத் தீர்ப்பவர்களாக இருப்பார்கள், மேலும் சமுதாய நலனுக்காகவும் பாடுபடுகிறவர்களாகத்தான் இருப்பார்கள். அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தில் இருந்து பெறப்பட்ட அறிவுஎன்பது சமூகத்தின் நலனுக்காகப்பயன்படுத்தப்பட வேண்டும் என்று நாங்கள் நம்புகிறோம். பிளஸ் 2 முடித்த மாணவர்களுக்காக ‘இந்து தமிழ் திசை’ நடத்தும் இந்த இணையவழி நிகழ்வுகளில் உடன் பயணிப்பதற்கு நாங்கள் பெருமை கொள்கிறோம்.

அம்ரிதா விஷ்வ வித்யாபீடம் கல்வித் துறையில் 25 ஆண்டுகளாக முன்னணியில் உள்ளது. சமூகத்துக்கான பொறியாளர்களை உருவாக்குவதில் அமிர்தா ஸ்கூல் ஆப் இன்ஜினியரிங் முக்கிய பங்கு வகிக்கிறது. அம்ரிதா விஷ்வ வித்யாபீடத்தின் வேந்தர் அம்மா கூறும்போது, ‘‘தைரியமாக இருங்கள்,தைரியத்தை இழக்காதீர்கள். இந்த தைரியமே, கரோனா வைரஸை அழிப்பதற்கான உண்மையான வைரஸ் தடுப்பு ஆகும்’’ என்றார். அம்மாவின் செய்தியை மனதில்கொண்டு, எதிர்காலத்தைப் பற்றி ஒரு நம்பிக்கையான கண்ணோட்டத்தோடு, அதற்கேற்ற திட்டமிடலோடு, இந்த ‘உயர்வுக்கு உயர்கல்வி’ எனும் ஆன்லைன் வழி நிகழ்ச்சியை நடத்த உள்ளது. இந்த ஆலோசனை மற்றும் வழிகாட்டும் நிகழ்ச்சி பிளஸ் 2 முடித்த மாணவர்கள் அடுத்து என்ன படிக்கலாம் என்பது குறித்து தெளிவான முடிவுகளை மேற்கொள்ள மிகுந்த பயனளிப்பதாக அமையும்.

இவ்வாறு அவர் கூறினார்.

‘உயர்வுக்கு உயர்கல்வி’ ஆன்லைன் வழிகாட்டி நிகழ்ச்சி வரும் ஜூலை 10-ம் தேதி தொடங்கி, 18 நிகழ்வுகளாக நடைபெற உள்ளது. மாலை 4.30 முதல்6.30 மணி வரை நடக்கும்இந்த நிகழ்வில், ரோபோடிக்ஸ், டேட்டா சயின்ஸ், எம்பெடெட் சிஸ்டம், அக்ரிகல்சர், ஃபுட் சயின்ஸ்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x