தனியார் பள்ளிகளில் இலவச மாணவர் சேர்க்கை: ஆன்லைனில் நாளை முதல் விண்ணப்பிக்கலாம்

தனியார் பள்ளிகளில் இலவச மாணவர் சேர்க்கை: ஆன்லைனில் நாளை முதல் விண்ணப்பிக்கலாம்
Updated on
1 min read

தனியார் பள்ளிகளில் இலவச மாணவர் சேர்க்கைக்கு நாளை (ஜூலை 5) முதல் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என்று பள்ளிக்கல்வித் துறை தெரிவித்துள்ளது.

இலவச மற்றும் கட்டாயக்கல்வி உரிமை சட்டப்படி சிறுபான்மை அல்லாத தனியார் பள்ளிகளில் 25 சதவீத இடங்களில் இலவசமாகஏழை குழந்தைகள் சேர்க்கப்படுவார்கள். இந்த திட்டத்தில் எல்கேஜி அல்லது ஒன்றாம் வகுப்பில் இலவசமாக சேரும் மாணவர்கள் 8-ம் வகுப்பு வரை கட்டணம் செலுத்த தேவையில்லை.

அதன்படி மாநிலம் முழுவதும் 12 ஆயிரத்துக்கும் அதிகமான தனியார் பள்ளிகளில் 1.12 லட்சம் இடங்கள் உள்ளன. நடப்பாண்டு சேர்க்கைக்கான ஆன்லைன் விண்ணப்பப்பதிவு நாளை (ஜூலை 5) தொடங்கி ஆகஸ்ட் 3-ம் தேதி வரை நடைபெற உள்ளது. பள்ளிக்கல்வி இணையதளம் (rte.tnschools.gov.in) வழியாக பெற்றோர்கள் விண்ணப்பிக்க வேண்டும்

விண்ணப்பதாரர்கள் வருமானம், இருப்பிடம், ஜாதி சான்றிதழ்களை முறையாக சமர்ப்பிக்க வேண்டும். இந்த திட்டத்தில் இடம்பெற்றுள்ள தனியார் பள்ளிகளின் பட்டியல் மற்றும் அதிலுள்ள இடங்களின் விவரங்கள் மேற்கண்டஇணையதளத்தில் வெளியிடப்பட் டுள்ளது.

இதுதொடர்பாக தனியார் பள்ளிகள் இயக்குநர் ஏ.கருப்பசாமி வெளியிட்ட அறிவிப்பில், ‘‘தனியார் பள்ளிகளில் 25 சதவீத இடஒதுக்கீடு மாணவர் சேர்க்கை குறித்து பெற்றோர் ஏதேனும் புகார் அல்லது ஆலோசனைகள் வழங்க விரும்பினால் மாவட்ட அளவில் அதன் முதன்மைக் கல்வி அதிகாரிகளிடமும், மாநில அளவில் தனியார் பள்ளிகள் இயக்குநர் மற்றும் தொடக்கக் கல்வி இயக்கு நரிடமும் தெரிவிக்கலாம்’’ என்று கூறப்பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in