Published : 29 Jun 2021 06:11 AM
Last Updated : 29 Jun 2021 06:11 AM

‘இந்து தமிழ் திசை’, எஸ்ஐபி அபாகஸ் சார்பில் மாணவர்களுக்கான அபாகஸ் முகாம்: ஆன்லைனில் ஜூலை 2-ல் தொடங்குகிறது

‘இந்து தமிழ் திசை’ நாளிதழ், எஸ்ஐபி அபாகஸ் (SIP abacus)சார்பில் பள்ளி மாணவர்களுக்கான அபாகஸ் முகாம், ஆன்லைனில் ஜூலை 2-ம் தேதி தொடங்கி, 3 நாட்கள் நடைபெறுகிறது.

‘இந்து தமிழ் திசை’ நாளிதழ், பள்ளி மாணவர்களுக்காக ஆன்லைன் வழியாக பல்வேறு செயல்பாடுகளை முன்னெடுத்து வருகிறது. அந்த வகையில், எஸ்ஐபி அபாகஸ் உடன் இணைந்து பள்ளிமாணவர்களுக்கான அபாகஸ் முகாம் ஜூலை 2-ம் தேதி தொடங்கி3 நாட்கள் நடைபெற உள்ளது.

இம் முகாமில் மாணவர்களின் கவனிக்கும் திறன், கணிதத் திறன், படித்ததை நினைவூட்டுதல், தன்னம்பிக்கை, பார்த்ததை நினைவில்வைத்தல் ஆகிய திறன்களை அதிகரிப்பதற்கான ஆலோசனைகள் வழங்கப்படும். மாலை 5 முதல் 6மணிவரை நிகழ்ச்சி நடைபெறும்.6 முதல் 12 வயதுள்ள மாணவ-மாணவிகள் பங்கேற்கலாம். ஒவ்வொரு குழுவும் 10 மாணவர்களைக் கொண்டதாக அமைக்கப் பட்டு, ஒவ்வொரு மாணவர்களுக்கும் தனிக் கவனம் செலுத்தப்படும்.

அபாகஸ் பயிற்சியை செயலி (APP) மூலம் கற்றுக்கொள்ள செல்போனும், ZOOM APP வழி நேரடியாகப் பங்கேற்க லேப்டாப்பும் இருக்கவேண்டும். பயிற்சியில் பங்கேற்கும் அனைவருக்கும் இ-சான்றிதழ்வழங்கப்படும். பங்கேற்க விரும்புவோர் பதிவுக் கட்டணமாக ரூ.294/- செலுத்தி https://bit.ly/3y2CKWK என்ற லிங்க்கில் பதிவு செய்யவேண்டும். மேலும் விவரங்களுக்கு 9791605238 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளவும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x