

கரோனா பரவல் மீண்டும் அதிகரித்து வரும் சூழலில் பள்ளி வளாகங்களில் பாதுகாப்பு வழிமுறைகளை முறையாகக் கடைபிடிக்கவேண்டும் என்று கல்வித் துறை அறிவுறுத்தியுள்ளது.
தமிழகத்தில் கரோனா பரவல்மீண்டும் அதிகரித்து வருகிறது.தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ளஒரு அரசுப்பள்ளியில் 50-க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு தொற்றுஉறுதி செய்யப்பட்டுள்ளது. இதுதவிர மேலும் சில பள்ளிகளில்மாணவர்கள், ஆசிரியர்களுக்கு தொற்று ஏற்பட்டு சிகிச்சை பெற்று வருவதாகக் கூறப்படுகிறது.
இதையடுத்து பள்ளி வளாகங்களில் பாதுகாப்பு வழிமுறைகளை அனைவரும் முறையாக பின்பற்ற வேண்டும் என்று கல்வித் துறை அறிவுறுத்தியுள்ளது. கரோனா பரவல் மீண்டும் அதிகரித்து வரும்சூழலில் மாணவர்கள் பாதுகாப்பை உறுதிசெய்வது அவசியம். அதன்படி முகக் கவசம் அணிதல், தனிநபர் இடைவெளி, கிருமிநாசினி கொண்டு அடிக்கடி கைகழுவுதல் உள்ளிட்ட வழிகாட்டுதல்களை முழுவதும் பின்பற்ற வேண்டும்.
அதனுடன், மாணவர்கள் பள்ளிகளில் இருந்து வீட்டுக்கு சென்றதும்மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு வழிமுறைகளையும் எடுத்துரைக்க வேண்டும். பெற்றோருக்கு தேவையான விழிப்புணர்வை வழங்க வேண்டும். தேர்வு நேரம்என்பதால் மாணவர்களிடம் நிலவும்அச்ச உணர்வை போக்கி முன்னெச்சரிக்கையாக செயல்பட அறிவுறுத்துவது அவசியம்.
விதிமுறைகளை பின்பற்றாத பள்ளிகள் தொடர்பாக ஏதேனும்புகார்கள் கிடைக்கப் பெற்றால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று பள்ளிக்கல்வி இயக்குநரகம் சார்பில் தலைமையாசிரியர்களுக்கு அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன.