Published : 09 Mar 2021 03:11 am

Updated : 09 Mar 2021 06:16 am

 

Published : 09 Mar 2021 03:11 AM
Last Updated : 09 Mar 2021 06:16 AM

ஏப்ரலில் நடைபெறுகிறது தட்டச்சு, சுருக்கெழுத்து தேர்வுகள்: தொழில்நுட்பக் கல்வித்துறை அறிவிப்பு

type-writing-exam

சென்னை

தட்டச்சு, சுருக்கெழுத்து, கணக்கியல் தேர்வுகள் ஏப்ரல் மாதம்நடைபெறும் என தொழில்நுட்பக்கல்வித் துறை அறிவித்துள்ளது.

இதுதொடர்பாக தொழில்நுட்பக் கல்வி இயக்குநரும், தொழில்நுட்பத் தேர்வுகள் வாரியத்தின்தலைவருமான கே.விவேகானந்தன் நேற்று வெளியிட்ட அறிவிப்பில் கூறியிருப்பதாவது:


இந்த ஆண்டுக்கான தட்டச்சு, சுருக்கெழுத்து, கணக்கியல் தேர்வுகள் ஏப்ரல் மாதம் நடத்தப்பட உள்ளன. இதற்கான விண்ணப்பப் படிவத்தை தொழில்நுட்பக் கல்வி இயக்ககத்தின் இணையதளத்தில் (www.tndte.gov.in/site) பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். விண்ணப்பக் கட்டணம் ரூ.20. தேர்வுக்கட்டணம் ஜுனியர் தேர்வுக்கு ரூ.65, சீனியர் தேர்வுக்கு ரூ.85. இண்டர் தேர்வுக்கு ரூ.80, ஹைஸ்பீடு தேர்வுக்கு ரூ.130.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை உரிய கட்டணத்துக்கான செலான் மற்றும் இதர ஆவணங்களுடன் மார்ச் 26-க்குள் நேரில்அல்லது தபால் மூலம் ‘தலைவர்,தேர்வு வாரியம், தொழில்நுட்பக் கல்வி இயக்ககம், கிண்டி, சென்னை - 600025’ என்ற முகவரி யில் சமர்ப்பிக்க வேண்டும்.

மார்ச் 30 வரை அபராதக் கட்டணம் ரூ.5 செலுத்தி விண்ணப்பிக்கலாம். மேலும் தகவலுக்கு 044-22351018, 22351014 ஆகிய தொலைபேசி எண்களில் தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு அறிவிப் பில் கூறப்பட்டுள்ளது.



தட்டச்சு சுருக்கெழுத்துதொழில்நுட்பக் கல்வித்துறைType writing examகணக்கியல்

Sign up to receive our newsletter in your inbox every day!

More From This Category

More From this Author

x