மகளிர் தினம்: பெண் துணைவேந்தர்கள், முதல்வர்கள், மாணவிகளுடன் மத்தியக் கல்வி அமைச்சர் கலந்துரையாடினார்

மகளிர் தினம்: பெண் துணைவேந்தர்கள், முதல்வர்கள், மாணவிகளுடன் மத்தியக் கல்வி அமைச்சர் கலந்துரையாடினார்
Updated on
1 min read

2021 மகளிர் தினத்தை முன்னிட்டு மத்தியக் கல்வி அமைச்சர் ரமேஷ் பொக்ரியால், பெண் துணைவேந்தர்கள், முதல்வர்கள், மாணவிகளுடன் இன்று கலந்துரையாடினார்.

சர்வதேச மகளிர் தினம் ஆண்டுதோறும் மார்ச் 8-ம் தேதி கொண்டாடப்படுகிறது. இந்நிலையில், மத்தியக் கல்வி அமைச்சர் ரமேஷ் பொக்ரியால், நாடு முழுவதும் உள்ள பல்கலைக்கழகங்களின் பெண் துணைவேந்தர்கள், கல்லூரி பெண் முதல்வர்கள், மாணவிகளுடன் இன்று கலந்துரையாடினார். ''தலைமைப் பண்பில் பெண்கள்: கோவிட்-19 உலகத்தில் சமத்துவ வருங்காலத்தை அடைதல்'' என்னு தலைப்பில் இந்த உரையாடல் நடைபெற்றது. அத்துடன் சிபிஎஸ்இ காமிக்ஸ் புத்தகத்தையும் அவர் வெளியிட்டார்.

அதைத் தொடர்ந்து மத்திய அமைச்சர் பொக்ரியால் பேசும்போது, ''இந்த நன்னாளில் வியக்கத்தகு பெண்கள் மற்றும் சிறுமிகளுக்குச் சமத்துவம் மற்றும் மரியாதையின் சூழலை உருவாக்க நாம் அனைவரும் இணைந்து பணியாற்றுவோம். இன்றைய இளைஞர்களே நாளைய எதிர்காலம். ஒரு ஆண் கல்வி கற்றால் அவன் மட்டுமே அறிவு பெறுகிறான். ஒரு பெண் கல்வி பெற்றால் ஒரு குடும்பமே பலன் அடையும்.

இன்றைய பெண்கள் ஒரு லட்சியத்தை அவர்கள் மனதில் இருத்திவிட்டால், அதை அடையும் வரை ஓய்வதில்லை. நீங்கள் அனைவரும் உங்களின் கனவுகளை அடைவீர்கள் என்று நம்புகிறேன்'' என்று தெரிவித்தார்.

அதையடுத்து பல்வேறு மாணவிகளின் உரையாடலையும் மத்தியக் கல்வி அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்து, அவர்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in