உலகின் டாப் 100 பொறியியல் கல்லூரிகளில் ஐஐடி சென்னைக்கு இடம்

உலகின் டாப் 100 பொறியியல் கல்லூரிகளில் ஐஐடி சென்னைக்கு இடம்
Updated on
1 min read

உலகின் தலைசிறந்த 100 பொறியியல் கல்லூரிகளின் பட்டியல் வெளியாகி உள்ளது. அதில் சென்னை ஐஐடி கல்வி நிறுவனமும் இடம்பிடித்துள்ளது.

அமெரிக்காவில் உள்ள QS உலக பல்கலைக்கழகம் 2021-ம் ஆண்டின் சர்வதேச அளவிலான சிறந்த பொறியியல் கல்லூரிகளின் பட்டியலை வெளியிட்டுள்ளது.

இந்தப் பட்டியலில் ஐஐடி சென்னை, பாம்பே மற்றும் டெல்லி ஆகிய கல்வி நிறுவனங்கள் இடம் பிடித்துள்ளன. பொறியியல் மற்றும் தொழில்நுட்பப் பாடப்பிரிவில் உலகளவில் ஐஐடி பாம்பே 49-வது இடத்தையும், டெல்லி 54-வது இடத்தையும், சென்னை 94-வது இடத்தையும் பிடித்துள்ளன.

அதைத் தொடர்ந்து ஐஐடி காரக்பூர் 101-வது இடத்தையும் ஐஐஎஸ்சி பெங்களூரு 103-வது இடத்தையும் பெற்றுள்ள நிலையில், ஐஐடி கான்பூர் மற்றும் ரூர்க்கி முறையே 107 மற்றும் 170-வது இடங்களைப் பிடித்துள்ளன.

உலக அளவில் மாஸாசுசெட்ஸ் தொழில்நுட்ப நிறுவனம் முதலிடத்தைப் பிடித்துள்ளது. அதைத் தொடர்ந்து ஸ்டான்ஃபோர்டு பல்கலைக்கழகம் மற்றும் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகம் ஆகியவை அடுத்தடுத்த இடங்களைப் பெற்றுள்ளன.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in