Published : 27 Feb 2021 04:35 PM
Last Updated : 27 Feb 2021 04:35 PM

கேட் தேர்வு விடைத்தாள் வெளியீடு: தவறான விடைகளைத் தெரிவிக்கலாம்

கேட் தேர்வு முடிவுகள் மார்ச் 22-ம் தேதி வெளியாக உள்ள நிலையில், இதற்கான விடைத்தாள் வெளியிடப்பட்டுள்ளது. மாணவர்கள் இதில் மாற்றுக் கருத்துகள் இருந்தால் தெரிவிக்கலாம்.

நாடு முழுவதும் உள்ள ஐஐடி, ஐஐஎஸ்சி உள்ளிட்ட மத்திய அரசின் தேசிய உயர் கல்வி நிறுவனங்களில் எம்.இ.,எம்.டெக்., எம்.ஆர்க்., எம்.பிளான் உள்ளிட்ட முதுநிலைப் பட்டப் படிப்புகளில் சேர கேட் நுழைவுத் தேர்வு நடத்தப்படுகிறது. இயந்திரவியல், கட்டிடவியல் உட்பட 27 பாடப் பிரிவுகளில் சேர்வதற்கான இத்தேர்வு கணினி வழியில் நடத்தப்படும். மொத்தம் 100 மதிப்பெண்களுக்குத் தேர்வு நடைபெறுகிறது.

2021-22ஆம் கல்வி ஆண்டு மாணவர் சேர்க்கைக்கான கேட் தேர்வு 2021 பிப்ரவரி 5, 6, 7, 12, 13, 14-ம் தேதிகளில் பாடப்பிரிவு வாரியாக நடைபெற்றது. இத்தேர்வை மும்பை ஐஐடி நடத்திய நிலையில், தற்போது ஆரம்பக்கட்ட விடைத்தாள் வெளியாகியுள்ளது. ஒவ்வொரு பாடத்துக்குமான விடைத்தாளை https://gate.iitb.ac.in/qp2021.php என்ற முகவரியை க்ளிக் செய்து பார்க்கலாம்.

இதில் தவறுகள் ஏதேனும் இருந்தால் மும்பை ஐஐடியிடம் தெரிவிக்கலாம். எனினும், இதற்காக ஒவ்வொரு மறுப்பு விடைக்கும் ரூ.500-ஐக் கட்டணமாகச் செலுத்த வேண்டும். இறுதிக்கட்ட விடைத்தாள் மார்ச் 18 அன்று வெளியிடப்படும்.

கூடுதல் தகவல்களுக்கு: https://gate.iitb.ac.in/

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x