காவல் உதவி ஆய்வாளர் பணிகளுக்கான நேர்காணல் தேதி அறிவிப்பு

காவல் உதவி ஆய்வாளர் பணிகளுக்கான நேர்காணல் தேதி அறிவிப்பு
Updated on
1 min read

தமிழ்நாடு சீருடைப் பணியாளர் குழுமம் சார்பில் 969 காவல் உதவி ஆய்வாளர் பணியிடங்களுக்கான தேர்வு அறிவிப்பு கடந்த 2019 மார்ச் மாதம் வெளியிடப்பட்டது. 2020 ஜனவரி 12, 13-ம் தேதிகளில் எழுத்து தேர்வுகள் நடைபெற்றன.

இந்த தேர்வின் முடிவுகள் மார்ச் 16-ம் தேதி வெளியானது. அதைத் தொடர்ந்து உடல் தகுதி தேர்வுகள் நடத்தப்பட்டன. அதில் வெற்றி பெற்றவர்களுக்கு மருத்துவ சோதனைகள் நடத்தப்பட்டன. அனைத்து தேர்வுகளிலும் வெற்றி பெற்றவர்களுக்கான நேர்காணல் 2020 டிசம்பர் 24 முதல்ஜனவரி 6 வரை நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டது. கரோனாவால் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நேர்காணல் தேர்வு வரும் 23-ம் தேதிமுதல் மார்ச் 2-ம் தேதி வரை நடைபெறும் என்று தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ளது. நேர்காணல் தேதிகள் தொடர்பான விவரங்கள் தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணைய இணையதளத்தில் (www.tnusrbonline.org)வெளியிடப்பட்டுள்ளன.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in