'மேட்' நுழைவுத் தேர்வு: விண்ணப்பிக்க அவகாசம் நீட்டிப்பு

'மேட்' நுழைவுத் தேர்வு: விண்ணப்பிக்க அவகாசம் நீட்டிப்பு
Updated on
1 min read

மேலாண்மைப் படிப்புகளுக்கான நுழைவுத் தேர்வான 'மேட்' தேர்வுக்கு விண்ணப்பிக்கக் கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

எம்பிஏ உள்ளிட்ட மேலாண்மைப் படிப்புகளுக்கும் அது சார்ந்த துணைப் படிப்புகளுக்கும் நுழைவுத் தேர்வாக 'மேட்' எனப்படும் மேலாண்மைத் திறனாய்வுத் தேர்வு (Management Aptitude Test - MAT) நடத்தப்படுகிறது. இத்தேர்வு அகில இந்திய மேலாண்மை சங்கம் (All India Management Association) சார்பில் நடத்தப்படுகிறது.

இத்தேர்வில் வெற்றி பெறும் தேர்வர்கள் இந்தியா முழுவதும் உள்ள பிசினஸ் ஸ்கூல் எனப்படும் தலைசிறந்த 600 கல்வி நிறுவனங்களில் சேர்ந்து படிக்க முடியும். காகித வழியிலும் கணினி வழியிலும் நடைபெறும் தேர்வுக்குக் கட்டணமாக ரூ.1,650- ஐச் செலுத்த வேண்டும்.

இந்தத் தேர்வுக்குத் தேர்வர்கள் விண்ணப்பிக்க பிப்.14 கடைசித் தேதியாக இருந்தது. இந்நிலையில், விண்ணப்பிக்கக் கால அவகாசம் பிப்ரவரி 16 வரை மதியம் 12 மணி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

மேட் தேர்வு இந்த ஆண்டு பிப்ரவரி, மே, செப்டம்பர் மற்றும் டிசம்பர் ஆகிய 4 மாதங்களில் நடைபெற உள்ளது. மேட் 2021 தேர்வு முதல் கட்டமாக பிப்ரவரி 20-ம் தேதி நடைபெறுகிறது.

கூடுதல் விவரங்களுக்கு: https://www.aima.in/content/testing-and-assessment/mat/mat

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in