Published : 15 Feb 2021 03:11 AM
Last Updated : 15 Feb 2021 03:11 AM

அம்ரிதா விஷ்வ வித்யாபீடம், ‘இந்து தமிழ் திசை’ வழங்கும் ஜேஇஇ நுழைவுத் தேர்வுக்கான இலவச ஆன்லைன் பயிற்சி: பிளஸ் 1, பிளஸ் 2 மாணவர்கள் பிப்.17-க்குள் விண்ணப்பிக்கலாம்

சென்னை

அம்ரிதா விஷ்வ வித்யாபீடம், ‘இந்துதமிழ் திசை’ நாளிதழ் இணைந்து, ஜேஇஇ நுழைவுத் தேர்வு எழுதுபவர்களுக்கான இலவச ஆன்லைன் பயிற்சி வகுப்பை ஃபிட்ஜி பயிற்சி நிறுவன ஒத்துழைப்புடன் நடத்த உள்ளன.

ஐஐடி, நிஃப்ட் போன்ற மத்திய உயர் கல்வி நிறுவனங்களில் சேர்வதற்கான ஜேஇஇ மெயின்தேர்வை எப்படி எதிர்கொள்வது,முந்தைய ஆண்டு கேள்வித்தாள்கள் பற்றிய அலசல், தேர்வுகால மன அழுத்தத்தை குறைப்பதற்கான வழிகாட்டல் ஆகியவற்றை ஆன்லைன் பயிற்சியாக அம்ரிதா விஷ்வவித்யாபீடமும், ‘இந்து தமிழ் திசை’நாளிதழும் இணைந்து வழங்க உள்ளன. இதற்கு பிப்ரவரியில் முதல்நிலைத் தேர்வு நடத்தப்படஉள்ளது. அதில் 7,500 மாணவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். அவர்களுக்கு ஃபிட்ஜி நிறுவனம்ரூ.9,400 மதிப்புள்ள ேஇஇ மெயின் தேர்வுக்கான இலவச பயிற்சியை வழங்கும்.

முதல்நிலைத் தேர்வில் பங்கேற்க விரும்பும் பிளஸ் 1, பிளஸ் 2மாணவர்களின் விவரங்கள் குறித்துஅந்தந்த பள்ளிகளின் தலைமைஆசிரியர், முதல்வர் jeepractice@amrita.edu மற்றும் vadivel.k@hindutamil.co.in என்ற மின்னஞ்சலுக்குகடிதம் எழுத வேண்டும். மேலும்,விவரங்களுக்கு 9840961923 என்றஎண்ணில் தொடர்பு கொள்ளலாம்.மாணவர்கள் https://bit.ly/3jlpZ37என்ற இணையத்தில் பிப்.17-க்குள்பதிவு செய்துகொள்ள வேண்டும். இதற்கு கட்டணம் கிடையாது.

இப்பயிற்சியில் நாலெட்ஜ் பார்ட்னராக ஃபிட்ஜி பயிற்சி நிறுவனம்இணைந்துள்ளது. முதல்நிலைத்தேர்வில் தேர்ச்சி பெறும் 7,500மாணவர்களுக்கான இலவச ஆன்லைன் பயிற்சி மார்ச் 1 முதல் 30-ம்தேதி வரை நடைபெறும். 11, 12-ம்வகுப்புகளின் கணிதம், இயற்பியல், வேதியியல் பாடங்களில்இருந்து முக்கிய தலைப்புகளும்முந்தைய ஆண்டுகளின் வினாத்தாள்களும் இதில் அடங்கியுள்ளன. இதில் 54 மணி நேரத்துக்கான ஆன்லைன் மற்றும் பதிவுசெய்யப்பட்ட வகுப்பு, 18 மணி நேரத் தேர்வு, 18 மணி நேர தேர்வுப் பகுப்பாய்வு நடைபெறும். இதில் பயிற்சி பெற்றவர்கள் ஐஐடி உள்ளிட்ட முன்னணிஅரசுக் கல்லூரிகளில் சேர முடியாமல் போனாலும், அவர்கள் அம்ரிதாகல்லூரியில் படிக்கலாம். அம்ரிதா பொறியியல் கல்லூரியின் விண்ணப்ப படிவ கட்டணத்தில் அவர்களுக்கு 50% தள்ளுபடி அளிக்கப்படும். கூடுதல் விவரங்களுக்கு 180042590009 என்ற எண்ணில் தொடர்புகொள்ளலாம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x