Published : 05 Feb 2021 03:16 AM
Last Updated : 05 Feb 2021 03:16 AM

10 ஆண்டுகளில் 1,885 பள்ளிகள் தரம் உயர்த்தல்: அமைச்சர் செங்கோட்டையன் தகவல்

சட்டப்பேரவையில் நேற்று கேள்வி நேரத்தின்போது, தங்கள் தொகுதிகளில் பள்ளிகள் தரம் உயர்த்துவது குறித்து அதிமுக உறுப்பினர்கள் ஆறுகுட்டி, கே.வி.ராமலிங்கம், சி.வி.ராஜேந்திரன், சத்யா, சதன் பிரபாகர், குமரகுரு ஆகியோர் கோரிக்கை விடுத்தனர்.

இவற்றுக்கு பதில் அளித்துஅமைச்சர் செங்கோட்டையன் பேசும்போது, ‘‘பள்ளிகள் தரம் உயர்த்தும்போது, அவற்றுக்குத் தேவையான இடம் வேண்டும். பொதுமக்கள் உரிய தொகையை செலுத்த வேண்டும். மாணவர்கள் போதிய அளவு இருக்க வேண்டும். இவற்றை பூர்த்தி செய்யும்போது பள்ளிகள் தரம் உயர்த்தப்படும்.

கடந்த 2011-ம் ஆண்டு முதல் இதுவரை 273 தொடக்கப் பள்ளிகள் தொடங்கப்பட்டுள்ளன. 127 தொடக்கப் பள்ளிகள் நடுநிலைப்பள்ளியாகவும், 1,114 நடுநிலைப்பள்ளிகள் உயர்நிலைப் பள்ளிகளாகவும், 644 உயர்நிலைப்பள்ளிகள் மேல்நிலைப் பள்ளிகளாகவும் தரம் உயர்த்தப்பட்டுள்ளன. விதிகளை பூர்த்தி செய்யும்போது அந்த பள்ளிகள் முதல்வரின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டு தரம் உயர்த்தப்படும்’’ என்று தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x