Published : 04 Jan 2021 03:49 PM
Last Updated : 04 Jan 2021 03:49 PM

சிபிஎஸ்இ பொதுத் தேர்வு அட்டவணை போலி: அரசு எச்சரிக்கை

சமூக வலைதளங்களில் வெளியான சிபிஎஸ்இ பொதுத் தேர்வுத் தேதிகள் போலியானவை என்றும் அவற்றை நம்ப வேண்டாம் எனவும் பத்திரிகைத் தகவல் அலுவலகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

சிபிஎஸ்இ 10, 12-ம் வகுப்புப் பொதுத்தேர்வுகள் வழக்கமாக பிப்ரவரி மாதத்தில் தொடங்கி மார்ச் மாதம் முடிவடையும். கரோனா காரணமாகத் தற்போது தாமதமாக மே 4ஆம் தேதி தொடங்கி, ஜூன் 10ஆம் தேதி முடிவடைகின்றன. செய்முறைத் தேர்வுகள் மார்ச் 1ஆம் தேதி தொடங்குகின்றன. இந்த அறிவிப்பை மத்தியக் கல்வி அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் கடந்த டிசம்பர் 31-ம் தேதி அறிவித்தார்.

தேர்வு குறித்த விரிவான கால அட்டவணை பின்னர் வெளியிடப்படும் என்றும், ஜூலை 15ஆம் தேதியன்று தேர்வு முடிவுகள் வெளியாகும் என்றும் அவர் தெரிவித்திருந்தார். தேர்வுக்கான வழிகாட்டு நெறிமுறைகள், அட்டவணை உள்ளிட்ட அனைத்தும் https://cbse.nic.in/ என்ற சிபிஎஸ்இ இணையதளத்தில் வெளியிடப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில், மே 4ஆம் தேதி தொடங்கி ஜூன் 10ஆம் தேதி முடிவடையும் விதத்தில், 10 மற்றும் 12ஆம் வகுப்புப் பொதுத் தேர்வுகளுக்கான கால அட்டவணை சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலானது. இந்நிலையில் அத்தகவலை பிஐபி எனப்படும் பத்திரிகைத் தகவல் அலுவலகம் மறுத்துள்ளது.

இதுதொடர்பாகத் தனது சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ள பிஐபி, ''சமூக வலைதளங்களில் வெளியான சிபிஎஸ்இ பொதுத் தேர்வுத் தேதிகள் போலியானவை. அவற்றை நம்ப வேண்டாம்'' என்று தெரிவித்துள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x