Published : 18 Dec 2020 02:48 PM
Last Updated : 18 Dec 2020 02:48 PM

மகாராஷ்டிராவில் நிஜாம் காலத்துப் பள்ளிக் கட்டிடங்கள் மறுசீரமைப்பு; அமைச்சர் அறிவிப்பு

மகாராஷ்டிராவில் நிஜாம் காலத்தில் கட்டப்பட்ட வகுப்பறைகள் உட்பட மராத்வாடா பகுதியில் உள்ள பள்ளிக் கட்டிடங்கள் மறுசீரமைக்கப்படும் என்று அம்மாநிலக் கல்வித்துறை அமைச்சர் வர்ஷா கெய்க்வாட் தெரிவித்துள்ளார்.

மராத்வாடா பகுதியில் 1960 ஆம் ஆண்டுக்கு முன்னால் ஏராளமான பள்ளிக் கட்டிடங்கள் கட்டப்பட்டன. குறிப்பாக நிஜாம் ஆட்சிக் காலத்தில் 1948 ஆம் ஆண்டுக்கு முன்னால் மத்திய மகாராஷ்டிராவின் மராத்வாடாவின் பெரும்பான்மையான பகுதிகளில் உள்ள பள்ளிக் கட்டிடங்கள் மீண்டும் மறு சீரமைப்பு செய்ய வேண்டிய நிலையில் உள்ளன.

இந்நிலையில், மராத்வாடா பகுதிகளில் உள்ள பள்ளிக் கட்டிடங்கள் மறுசீரமைக்கப்படும் என்று அம்மாநிலப் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் வர்ஷா கெய்க்வாட் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்துத் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், ’’8 மாவட்டங்களில் நிஜாம் காலத்துக் கட்டிட்ங்கள் உட்பட 1,045 பள்ளிகளில் அதிகளவில் மறுசீரமைப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன. இங்கு சுமார் 3,500 புதிய பள்ளி வகுப்பறைகள் கட்ட்ப்படும்.

இதில் அதிகபட்சமாக பீடு பகுதியில் 293 பள்ளிகள், அவுரங்காபாத்தில் 130 பள்ளிகள், ஹிங்கோலியில் 42, ஜல்னாவில் 203, லட்டூர் பகுதியில் 94, நந்தேத் 157, உஸ்மானாபாத் 51 மற்றும் பர்பானியில் 75 பள்ளிகளில் சீரமைப்புப் பணிகள் நடைபெற உள்ளன. இதற்காக ரூ200 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது’’ என்று வர்ஷா கெய்க்வாட் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x