Last Updated : 10 Dec, 2020 03:28 PM

 

Published : 10 Dec 2020 03:28 PM
Last Updated : 10 Dec 2020 03:28 PM

தமிழ்நாடு வேளாண். பல்கலையில் முதுநிலை, பிஎச்.டி. மேற்படிப்புகளுக்கு மாணவர் சேர்க்கை: விண்ணப்பிக்க டிச. 31-ம் தேதி கடைசி நாள்

இணையவழி முதுநிலை பட்ட மேற்படிப்பு, பிஎச்.டி. மாணவர் சேர்க்கையைத் தொடங்கி வைத்த துணைவேந்தர் என்.குமார்.

கோவை

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில், முதுநிலை, பிஎச்.டி. மேற்படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பிக்க டிச.31-ம் தேதி கடைசி நாள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழத்தில் 32 முதுநிலை பட்ட மேற்படிப்புகளும், 29 பிஎச்.டி. ஆராய்ச்சிப் படிப்புகளும் நடத்தப்பட்டு வருகின்றன. இப்படிப்புகளில் 2020-2021 ஆம் கல்வியாண்டுக்கான மாணவர் சேர்க்கையைத் துணை வேந்தர் என். குமார் தொடங்கி வைத்தார்.

இந்நிலையில் இதுகுறித்து முதுநிலை பட்ட மேற்படிப்பு டீன் ஜா.சா. கென்னடி கூறியதாவது:

''முதுநிலை பாடப்பிரிவுகளில் வேளாண் பொருளியல், வேளாண் பூச்சியியல், வேளாண் விரிவாக்கம், வேளாண் நுண்ணுயிரியல், உழவியல், பயிர் வினையியல், மரபியல் மற்றும் தாவர இனப்பெருக்கம், நூற்புழுவியல், பயிர் நோயியல், விதை அறிவியல் மற்றும் தொழில்நுட்பம், மண்ணியல் மற்றும் வேளாண் வேதியியல், தொலையுணர்வு மற்றும் புவியியல் தகவல் அமைப்பு, உயிரி தொழில்நுட்பவியல், உயிர் தகவலியல், சுற்றுச்சூழல் அறிவியல், வேளாண் வணிக மேலாண்மை, பட்டுப்புழு வளர்ப்பு, வேளாண் காலநிலை ஆராய்ச்சி, நானோ அறிவியல் மற்றும் தொழில்நுட்பம், புள்ளியியல், தோட்டக்கலை, வேளாண்மைப் பொறியியல், வனவியல், சமுதாய அறிவியல் ஆகிய பாடப்பிரிவுகளுக்கு மாணவர் சேர்க்கை தொடங்கியுள்ளது.

பிஎச்.டி. ஆராய்ச்சிப் படிப்பில் வேளாண் பொருளியியல், வேளாண் பூச்சியியல், வேளாண் விரிவாக்கம், வேளாண் நுண்ணுயிரியல், உழவியல், பயிர் வினையியல், மரபியல் மற்றும் தாவர இனப்பெருக்கம், நூற்புழுவியல், பயிர் நோயியல், விதை அறிவியல் மற்றும் தொழில்நுட்பம், மண்ணியல் மற்றும் வேளாண் வேதியியல், உயிரி தொழில்நுட்பவியல், சுற்றுச்சூழல் அறிவியல், வேளாண் வணிக மேலாண்மை, பட்டுப்புழு வளர்ப்பு, நானோ அறிவியல் மற்றும் தொழில்நுட்பம், தோட்டக்கலை, வேளாண்மைப் பொறியில், வனவியல், சமுதாய அறிவியல் ஆகிய துறைகளுக்கு மாணவர் சேர்க்கை தொடங்கப்பட்டுள்ளது.

மாணவர் சேர்க்கை குறித்த விவரங்களை அறிந்துகொள்ள www.admissionsatpgschooltnau.ac.in என்ற இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ள தகவல் கையேட்டைக் காணலாம்.

மேலும் விவரங்களுக்கு 0422-6611261, 0422-6611461 ஆகிய தொலைபேசி உதவி எண்களை அனைத்து வேலை நாட்களிலும் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை தொடர்பு கொள்ளலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை டிச. 31-ம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும். வரும் ஜன. 12-ம் தேதி நுழைவுத்தேர்வு நடைபெறும்''.

இவ்வாறு அவர் கூறினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x