உதவித் தொகையோடு எம்இ, எம்டெக் படிக்கலாம்: மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பிக்க அண்ணா பல்கலை. அறிவிப்பு

உதவித் தொகையோடு எம்இ, எம்டெக் படிக்கலாம்: மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பிக்க அண்ணா பல்கலை. அறிவிப்பு
Updated on
1 min read

கேட் உதவித்தொகையோடு எம்இ, எம்டெக் படிக்க விரும்பும் மாணவர்கள், சேர்க்கைக்கு டிச.10 வரை விண்ணப்பிக்கலாம் என்று அண்ணா பல்கலைக்கழகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

ஐஐடி, ஐஐஎஸ்சி உள்ளிட்ட மத்திய அரசின் தேசிய உயர் கல்வி நிறுவனங்களில் எம்.இ.,எம்.டெக்., எம்.ஆர்க்., எம்.பிளான் உள்ளிட்ட பட்ட மேற்படிப்புகளில் சேருவதற்கு கேட் (Graduate Aptitude Test in Engineering) என்ற நுழைவுத் தேர்வு நடத்தப்படுகிறது. மொத்தம் 100 மதிப்பெண்களைக் கொண்ட இத்தேர்வு சிவில், மெக்கானிக்கல், கம்ப்யூட்டர் சயின்ஸ், எலெக்ட்ரானிக்ஸ் மற்றும் கம்யூனிகேஷன், ஏரோ ஸ்பேஸ் உட்பட 25 பாடப் பிரிவுகளில் நடத்தப்படுகிறது.

இத்தேர்வில் தேர்ச்சி பெறும் ஓபிசி (க்ரீமிலேயர் அல்லாத), எஸ்சி, எஸ்டி மற்றும் மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு, அவர்கள் படிப்பை முடிக்கும் வரை உதவித் தொகை வழங்கப்படுகிறது.

இதற்கான மாணவர் சேர்க்கைக்கு டிச.10 ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று அண்ணா பல்கலைக்கழகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. டிசம்பர் 11 ஆம் தேதி இணைய வழியில் எம்இ, எம்டெக் படிப்புகளுக்கு மாணவர் சேர்க்கை நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in